காவிரியின் குறுக்கே எந்த அணையை கட்டினாலும் டெல்லியில் விவசாயிகள் தற்கொலை போராட்டம் நடத்துவோம் - தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம்

காவிரியின் குறுக்கே எந்த அணையை கட்டினாலும் டெல்லியில் விவசாயிகள் தற்கொலை போராட்டம் நடத்துவோம் - தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம்

தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின் மாநில பொதுக்குழு கூட்டம் திருச்சி - கரூர் புறவழிச்சலையில் உள்ள அச்சங்கத்தின் மாநில அலுவலகத்தில் மாநில தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் நடைபெற்றது. இதில் தமிழகம் முழுவதுமிருந்து மாநில மற்றும் மாவட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர். இதில் மாநில நிர்வாகிகள் அடங்கிய புதிய கமிட்டியும் தேர்வு செய்யப்பட்டது.

மேகதாது அணையைக் கட்டக்கூடாது, தமிழகத்திற்கான தண்ணீரை தடுக்கும் நோக்கில் காவிரியின் குறுக்கே எந்த அணையும் கட்டக்கூடாது என்றும் அவ்வாறு கட்டினால் டெல்லியில் விவசாயிகள் தற்கொலை போராட்டம் நடத்துவது, வேளாண் சட்டங்களை எதிர்த்து 9 மாதங்களாக டெல்லியில் விவசாயிகள் போராடி வரும் நிலையில், போராட்டத்தில் பங்கேற்பது குறித்து நீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ள வழக்கில் தீர்ப்பு வரும்பட்சத்தில் டெல்லி விவசாயிகளுடன் போராட்டத்தில் பங்கேற்பது என்றும், லாபகரமான விலை கிடைக்கும் வரை கடன் தள்ளுபடி செய்யவும், 60-வயது கடந்த விவசாயிகளுக்கு 5 ஆயிரம் பென்சன் வழங்க வேண்டும், விவசாய கடன் பெற்ற விவசாயின் மகனுக்கு கல்விக்கடன் வழங்க மறுப்பதை நிறுத்த வேண்டும்.

நேரடி கொள்முதல் நிலையங்களில் நெல்லை விரைந்து கொள்முதல் செய்யவும் விவசாயிகளிடமிருந்து லஞ்சம் பெறுவதை தடுத்திடவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும் வேளாண்துறைக்கு என தனிபட்ஜெட்டை வரவேற்பதாகவும், அதேநேரம் பட்ஜெட் குறித்து விவாதிக்கவும், ஆலோசிக்கவும் விவசாய சங்க பிரதிநிதிகளை அழைக்காதது சந்தேகமளிப்பதாக அமைந்துள்ளது என்றும், இதுதொடர்பாக முதல்வரை சந்தித்து பேச உள்ளதாகவும் விவசாய சங்க தலைவர் அய்யாக்கண்ணு தெரிவித்தார்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....
https://chat.whatsapp.com/IBy8wyy7jdhEKVBGDROeon

டெலிகிராம் மூலமும் அறிய....
https://t.me/trichyvisionn