திருச்சியில் 9480 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் 2 மாவு அரைக்கும் மில்களுக்கு சீல்

திருச்சியில் 9480 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் 2 மாவு அரைக்கும் மில்களுக்கு சீல்

திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களுக்கு வரப்பெற்ற புகாரின் அடிப்படையில் திருச்சிராப்பள்ளி மாவட்டம், திருச்சிராப்பள்ளி மேற்கு மற்றும் கிழக்கு வட்டம் ஆகிய பகுதிகளில் பொது விநியோகத் திட்ட ரேஷன் அரிசியை கள்ளத்தனமாகக் கடத்தி மாவாக அரைத்து விற்பது தொடர்பாக திடீர் சோதனை மேற்கொள்ள திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சித்தலைவர் உத்தரவிட்டார்.

மேற்படி பகுதிகளில் உள்ள மாவரைக்கும் மில்களை மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் அன்பழகன் தலைமையில், திருச்சி கிழக்கு, மேற்கு மற்றும் ஸ்ரீரங்கம் வட்ட தனி வட்டாட்சியர் தலைமையில், பறக்கும் படை துணை வட்டாட்சியர் மற்றும் திருவெறும்பூர் வட்ட வழங்கல் அலுவலர் ஆகியோர் அடங்கிய சிறப்புக் குழு அமைத்து நேற்று (23.10.2021) சோதனை மேற்கொண்டனர்.

அப்பொழுது திருச்சிராப்பள்ளி கிழக்கு வட்டம் அரியமங்கலம் பகுதியில் உள ;ள அன்வர் பிளவர் மில்லில் பொது விநியோகத் திட்ட ரேஷன் அரிசி கலந்த 7650 கிலோ குருணை அரிசி மற்றும் குருணையாக அரைக்க தயாராக இருந்த 120 கிலோ பொது விநியோகத்திட்ட ரேஷன் அரிசி கைப்பற்றப்பட்டது. மேலும் திருச்சிராப்பள்ளி மேற்கு வட்டம் உறையூர் பகுதியில் அனுமதியின்றி சிவனேசன் என்பவருக்கு சொந்தமான மில்லில் 
1500 கிலோ உடைத்த பொதுவிநியோகத் திட்ட அரிசி மற்றும் 210 கிலோ பொது 
வினியோகத் திட்ட அரிசி கைப்பற்றப்பட்டது.

இக்குற்றத்தில் தொடர்புடைய மேற்கண்ட இரு மாவு அரைக்கும் மில்களும் சீல் வைக்கப்பட்டுள்ளது. மேலும் இக்குற்றங்களுக்கு தொடர்புடைய 
உரிமையாளர்கள் மீது குடிமைப்பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத் துறையின் 
மூலம் வழக்கு பதிவு செய்யப்பட்டு மேல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. 
பொது வினியோகத் திட்ட ரேஷன் அரிசி கடத்தலில் ஈடுபடும் நபர்கள் மீது கடும் 
நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும், இதுபோன்ற குற்ற வழக்கில் ஈடுபடும் 
நபர்கள் மீது குண்டர் சட்டத்தின் கீழ் வழக்கு தொடரப்பட்டு கடும் நடவடிக்கை 
மேற்கொள்ளப்படும் எனவும் திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சித் தலைவர் சு.சிவராசு தெரிவித்துள்ளார்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....
https://chat.whatsapp.com/EAKTE8CG371C7uSS3EIUus

டெலிகிராம் மூலமும் அறிய...
https://t.me/trichyvisionn,