மருது சகோதரர்கள் தூக்கிலிடப்பட்ட நாள்- DYFI திருச்சியில் நினைவு தினம் அனுசரிப்பு.

மருது சகோதரர்கள் தூக்கிலிடப்பட்ட நாள்- DYFI திருச்சியில் நினைவு தினம் அனுசரிப்பு.

பெண் மறுமணம், எம் மதத்தையும் ஏற்க சுதந்திரம் என முற்போக்கு ஆட்சி நடந்தினர். மேலும் இந்திய வரலாற்றில் வெள்ளையர்களை எதிர்த்து முதன் முதலில் திருச்சியில் 1801 ம் ஆண்டு ஜீன் 16ம் நாள்  ஸ்ரீரங்கம் மற்றும் மலைக்கோட்டையில் ஜம்புத் தீவு பிரகடனம் வெளியிட்டு சாதி மத பேதமின்றி மக்களையும், அனைத்து சிற்றரசர்களை ஒருங்கிணைத்த காரணத்திற்காகவும் , சுயமரியாதைமிகு மருது சகோதரர்கள் மற்றும் குடும்பத்தினர் உள்ளிட்ட 500 பேரை தூக்கிலிடப்பட்ட தினம்.

சாமானியர்களாக இருந்து ஆட்சியாளராக உருவான அவர்களை சாதி பிரதிநிதிகளாக்கியது காலக்கொடுமை. அனைத்து தரப்பு மக்களையும் ஒன்றிணைத்து வெள்ளையர்களுக்கு எதிராய் படை திரட்டிய சுதந்திர போராட்ட வீரர்கள் மருதுபாண்டி சகோதரர்களின் நினைவைப் போற்றும் வகையில் திருச்சியில் நினைவு சின்னம் அமைத்திட வேண்டும்.

இதனை வலியுறுத்தி DYFl நினைவு ஜோதி ஓட்டம் இன்று 24.10.2021 காலை  தேவி டாக்கீஸ் முதல் ஸ்ரீரங்கம் கோபுரம் வரை ஜோதி ஓட்டமும் பெற்ற சுதந்திரத்தை பேணி காத்திட உறுதிமொழி ஏற்பு நிகழ்வு நடைபெற்றது. இந்நிகழ்விற்கு மாநகர் மாவட்ட தலைவர்  சுரேஷ் தலைமை ஏற்றார்.மாநகர் மாவட்ட செயலாளர் லெனின் சிறப்புரையாற்றினார்.மாநகர் மாவட்ட பொருளாளர்  ஜெயக்குமார் நன்றியுரையாற்றினர் .நிர்வாகிகள் ரெட்டமலை,யுவராஜ், சந்தோஷ், சோலை, சந்துரு, முகேஷ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....

https://chat.whatsapp.com/EAKTE8CG371C7uSS3EIUus 

டெலிகிராம் மூலமும் அறிய...

https://t.me/trichyvisionn