81 தற்காலிக பட்டாசு கடைகள் அமைக்க அனுமதி, பாதுகாப்பு விதிகளை பின்பற்ற அறிவுறுத்தல்
வருகின்ற (12.11.2023)-ந் தேதி "தீபஒளி திருநாள்" தமிழகம் முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட உள்ள நிலையில், தீபாவளி பண்டிகையை பொதுமக்கள் பாதுகாப்புடன் கொண்டாடுவதை உறுதி செய்தும் வகையில், திருச்சி மாநகரில் தற்காலிக பட்டாசு விற்பனை கடை நடத்த திருச்சி மாநகர காவல் ஆணையர் ந.காமினி, பல்வேறு நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கியுள்ளார்.
மேலும் திருச்சி மாநகரில் பல்வேறு இடங்களில் தற்காலிக பட்டாசு விற்பனை கடை நடத்த அனுமதி கேட்டு வியாபாரிகளிடமிருந்து மனுக்கள் பெறப்பட்டுள்ளன.
இவ்வாறு அனுமதி கேட்ட பட்டாசு கடைகளுக்கு காவல்துறையினர் மற்றும் தீயணைப்பு துறையினர் நேரடியாக சென்று ஆய்வு செய்து அனைத்து விதமான பாதுகாப்பு முன்னேற்பாடுகள் சரியாக செய்யப்பட்டுள்ளனவா? தீயணைப்பு சாதனங்கள் வைக்கப்பட்டுள்ளனவா? போன்ற பல்வேறு நிபந்தனைகளை என களஆய்வு செய்து 81 பட்டாசு விற்பனை கடைகளுக்கு நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இந்த வருடம் தீபாவளியை திருச்சி மாநகர பொதுமக்கள் மகிழ்ச்சியாகவும், பாதுகாப்பாகவும், விபத்தில்லா தீபாவளியாகவும் கொண்டாட பட்டாசு விற்பனையாளர்கள் காவல்துறையினருக்கு ஒத்துழைப்பு தரவேண்டும் என்றும் தற்காலிக பட்டாசு கடைகள் திருச்சி மாநகரருக்குள் காவல்துறை மற்றும் மற்ற துறைகளின் முறையான அனுமதி பெறாமால் நடத்துவது சட்டப்படி குற்றம் எனவும், அதனை மீறி கடைநடத்தும் கடை உரிமையாளர் மீது கடுமையான மற்றும் சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும். மேலும் ஆன்லைனில் குறைந்த விலைக்கு பட்டாசு விற்பனை செய்வதாக வரும் விளம்பரங்களை நம்ப ஏமாற வேண்டாம் எனவும் திருச்சி மாநகர காவல் ஆணையர் தெரிவித்துள்ளார்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய.... https://chat.whatsapp.com/GgA8w690Wqd7IwIEsO6ZZ5
#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvisionn
https://www.threads.net/@trichy_vision