திருச்சி பன்னாட்டு விமான நிலைய சுற்றுசுவரை உடைத்துக் கொண்டு உள்ளே சென்ற லாரி

திருச்சி பன்னாட்டு விமான நிலைய சுற்றுசுவரை உடைத்துக் கொண்டு உள்ளே சென்ற லாரி

ஓசூரில் இருந்து அறந்தாங்கிக்கு தினசரி காய்கறி ஏற்றிச் செல்லும் (எஸ் வி ஆர் ரெகுலர் லாரி சர்வீஸ்) காய்கறி ஏற்றிச் சென்று கொண்டிருந்தது. புதுக்கோட்டை சேர்ந்த செந்தில்குமார் என்பவர் லாரியை ஓட்டி வந்தார்.

அதிகாலை 3.45 மணியளவில் திருச்சி விமான நிலையம் பகுதியில் உள்ள நெடுஞ்சாலையில் லாரி சென்று கொண்டிருந்தபோது முன்னே சென்ற லாரியை முந்த முயன்றது.

அப்போது லாரியின் பின்னால் மோதிய காய்கறி லாரி ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து விமான நிலையம் சுற்று சுவரின் மீது மோதி உள்ளே நுழைந்தது. அப்போது பாதுகாப்பு பணியில் இருந்த மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

பின்னர் கிரேன் வரவழைக்கப்பட்டு சுற்றுசுவர் மீது மோதிய லாரியை அப்புறப்படுத்தினர். இது குறித்து தெற்கு போக்குவரத்து புலனாய்வு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

2018 அக்டோபர் 12ஆம் தேதி ஏர் இந்தியா விமானம் திருச்சி விமான நிலையத்தில் இருந்து பறந்த போது சமிக்கை  கருவிகள் மீது மோதி சுற்று சுவரை உடைத்துக் கொண்டு சென்றது குறிப்பிடத்தக்கது.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய... https://chat.whatsapp.com/I1qYhcBomJGKR4Fi6km3h0

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.co/nepIqeLanO