தமிழகத்தில் உள்ள மாநகராட்சிகளுக்கு திருச்சி மாநகராட்சி முன்னுதாரணமாக இருக்கும் புதிதாக பதவி ஏற்றுக்கொண்ட மேயர் மு.அன்பழகன் பேட்டி

தமிழகத்தில் உள்ள மாநகராட்சிகளுக்கு திருச்சி மாநகராட்சி முன்னுதாரணமாக இருக்கும் புதிதாக பதவி ஏற்றுக்கொண்ட மேயர் மு.அன்பழகன் பேட்டி

திருச்சி மாநகராட்சி மேயர் மற்றும் துணை மேயர்கான மறைமுக தேர்தல் இன்று திருச்சி மாநகராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. முன்னதாக இன்று காலை 09.30 மணி அளவில் 65 மாமன்ற உறுப்பினர்களும் கூட்ட அரங்கில் ஒன்று கூடினர். பின்னர் மாநகராட்சி ஆணையர் முஜிபுர் ரகுமான் மேயர் பதவிக்கு போட்டியிட விரும்புவோர் வேட்புமனு தாக்கல் செய்யலாம் என அறிவித்தார். ஆனால் யாரும் வேட்புமனு தாக்கல் செய்யாததால் 27வது வார்டில் வெற்றி பெற்ற அன்பழகன் மேயராக போட்டியின்றி ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டுள்ளார் என்று மாநகராட்சி ஆணையர் அறிவித்தார்

இதனை தொடர்ந்து நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் பேயர் அன்பழகனுக்கு பூங்கொத்து வாழ்த்து தெரிவித்து  கொடுத்தனர் பின்னர் மேயர் காண உடையை மேயர் அன்பழகன் அணிவித்து அவரது மேயர் இருக்கையில் அமைச்சர்கள் அமர வைத்தனர் பின்னர் திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசு மாநகர காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் ஸ்ரீரங்கம் சட்டமன்ற உறுப்பினர் பழனியாண்டி, கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் இனிகோ இருதயராஜ் ஆகியோர் மேயர் அன்பழகனுக்கு பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தனர்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த மேயர் அன்பழகன்..... திருச்சி மாநகராட்சி மேயர் அன்பழகன் குப்பை இல்லாத மாநகராட்சியாக திருச்சியை உருவாக்குவதே எனது முதல் பணி. மேயர் பதவியாக கருதாமல் பொறுப்பாக கருதுவேன். சென்னைக்கு அடுத்தபடியாக திருச்சி மாநகராட்சியை உருவாக்குவேன் தமிழகத்தில் உள்ள மாநகராட்சிகளுக்கு திருச்சி மாநகராட்சி முன்னுதாரணமாக இருக்கும் என்றார்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....
https://chat.whatsapp.com/JGMr6bBQJfFC6SA9x0ZYzj

#டெலிகிராம் மூலமும் அறிய...
https://t.co/nepIqeLanO