முழு சுகாதாரம் குறித்து கிராம மக்களுக்கு விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி
கிராம பள்ளிகளில் பொது சுகாதாரம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அடுத்துள்ள பூனாம்பாளையம் கிராமத்தில் சமுதாய கூடத்தில் தூய்மையே சேவை என்ற தலைப்பில் கிராமாலயா சார்பில் விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
இந்த நிகழ்ச்சியை பூனாம்பாளையம் ஊராட்சி மன்ற தலைவர் ஹரிகிருஷ்ணன், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ராஜமாணிக்கம் தலைமை தாங்கி துவக்கி வைத்தார். இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சி அனைத்து கிராமப்புற குடியிருப்புகளிலும் தனி நபர் இல்லக் கழிப்பறை கட்டப்பட்டு வருகிறது. அதன்படி பூனாம்பாளையம் கிராம மக்கள், பள்ளி மாணவர்கள், தன்னார்வலராக கலந்து கொண்டுள்ளனர்.
மேலும் இந்த சுகாதார விழிப்புணர்வு நிகழ்ச்சியில் தன்சுத்தம், சுற்றுப்புற சுகாதாரம், கழிப்பறை உபயோகம், கை கழும் முறை, திடக்கழிவுகளை மக்கும், மக்காத குப்பைகளை தரம் பிரித்தல், அவற்றை உரமாக மாற்றுவது அதனைத்தொடர்ந்து அதேபோல், தெருக்களைத் தூய்மையாக்குதல், கழிவுகளைப் பாதுகாப்பான முறையில் சேகரித்து தரம் பிரித்து வெளியேற்றி கழிவுகள் இல்லாத சுற்றுப்புறத்தை உருவாக்குதல் என நாடகங்கள், பாடல்கள், நடனங்கள் நடத்தினர்.
மேலும் கிராம மக்களுக்கு எளிதில் புரியும் வகையில் கலை நிகழ்ச்சி கலைஞர்கள் விளக்கிக் நடித்து காண்பித்தனர். இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கிராமாலயா நிர்வாகிகள் பழனியாண்டி, செந்தில்குமார், கிருத்திகா, கலை நிகழ்ச்சி நடிகர்கள் வேல்முருகன் மற்றும் கிராம மக்கள், பள்ளி மாணவர்கள் பலர் கலந்து கொண்டனர்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/IpuTLRgmGqo0toZpY6O5jW
#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision