திருச்சியில் தேசிய பாதுகாப்பு படையினர் பாதுகாப்பு ஒத்திகை - மாநகர காவல் ஆணையர் ஆலோசனை

திருச்சியில் தேசிய பாதுகாப்பு படையினர் பாதுகாப்பு ஒத்திகை - மாநகர காவல் ஆணையர் ஆலோசனை

திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில்,  ரங்கா கோபுரம் வடக்கு வாசல், வெள்ளை கோபுர வாசல் ஆகியவை முன், நேற்று நள்ளிரவு முதல் இன்று அதிகாலை வரை கமாண்டோ படையினர் பாதுகாப்பு ஒத்திகை நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

30 ராணுவ வாகனங்களில் வந்த 150 க்கும் மேற்பட்ட கமாண்டோக்கள் கையில் துப்பாக்கி ஏந்தியடி, கோவில் உள்ளே புகுந்தனர்.    கோவிலுக்குள் தீவிரவாதிகள் திடீரென்று புகுந்து விட்டால், அவர்களை எப்படி கையாண்டு பக்தர்களை பாதுகாப்பது, என்பதை கமாண்டோ பாதுகாப்பு  படையினர் ஒத்திகையில் ஈடுபட்டனர்.

நேற்று நள்ளிரவு முதல் இன்று அதிகாலை 2 மணி வரை, மாநகர போலீஸ் கமிஷனர் சத்திய பிரியா முன்னிலையில், தீவிரவாதிகளை ரப்பர் குண்டுகளால் சுட்டு வீழ்த்தி, சுற்றி வளைப்பது போன்ற ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த சம்பவத்தால், ஸ்ரீரங்கத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

திருச்சி மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் காவல் ஆணையர் சத்ய பிரியா தலைமையில் தேசிய பாதுகாப்பு படை சேர்ந்த மேஜர் திவாகர் மற்றும் தமிழ்நாடு கமாண்டோ படை ஏடிஎஸ்பி பிரபாகரன் ஆகியோருடன் தீவிரவாத தடுப்பு ஒத்திகை ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருகிறது.

தீவிரவாத தாக்குதல் எதுவும் நடைபெற்றால் அதனை முறியடிப்பது குறித்து ஒத்திகை செயல்பாடுகள் குறித்து மாநகர காவல் ஆணையர் சத்ய பிரியா ஆலோசனை நடத்தி வருகிறார்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய https://chat.whatsapp.com/CVEI9HGZeZI6ualvRGNLGP

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvisionn