கழிவறைக்கு பூட்டு போட்ட பெண் உதவி ஆய்வாளர் ஆயுதப்படைக்கு மாற்றம்

கழிவறைக்கு பூட்டு போட்ட பெண் உதவி ஆய்வாளர் ஆயுதப்படைக்கு மாற்றம்

திருச்சி மாவட்டம் துவரங்குறிச்சி காவல் நிலைய கட்டிடத்தின் முதல்தளத்தில் காவலர்களுக்கான ஓய்வறை உள்ளது. இந்த ஓய்வறையை இங்கு காவல் உதவி ஆய்வாளராக பணியாற்றி வந்த லதா (53) தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்ததாக கூறப்படுகிறது. அத்துடன் கடந்த சில நாட்களாக அந்த ஓய்வறையில் உள்ள பெண்கள் கழிவறையை பூட்டு போட்டு பூட்டி, சாவியை தன்வசம் வைத்துள்ளார்.

துவரங்குறிச்சி காவல் நிலைய பெண் காவலர்கள் மற்றும் அங்கு பணிக்கு செல்லும் பெண் போலீசார் அவசர நேரங்களில் கழிவறையை பயன்படுத்த வேண்டுமானால் உதவி ஆய்வாளர் லதாவிடம் சென்றுதான் சாவி வாங்கி பயன்படுத்த வேண்டிய நிலை இருந்தது. அத்துடன் அவரிடம் கழிவறைக்கான சாவியை கேட்டால் தர மறுத்து, பெண் போலீசாரிடம் கண்ணிய குறைவாக பேசியதாக தெரிகிறது.

இதனால் பாதிக்கப்பட்ட பெண் போலீசார், கழிவறை பூட்டியிருந்ததை வீடியோவாக பதிவு செய்து, திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வருண்குமாரின் பிரத்யேக செல்போன் எண்ணுக்கு வாட்ஸ் அப்பில் அனுப்பினர். அதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வருண்குமார், ஒப்பன் மைக்கில் துவரங்குறிச்சி காவல்நிலைய ஆய்வாளர் சண்முக சுந்தரத்தை அழைத்து,

காவல் நிலையத்தில் கழிவறையை பூட்டி தனி நபருக்கான மனித உரிமை மீறலில் ஈடுபட்ட உதவி ஆய்வாளரை லதாவை உடனடியாக பணியில் இருந்து விடுவித்து, ஆயுதப்படைக்கு பணிக்கு அனுப்புங்கள். தேவைப்பட்டால் அவர் மீது சட்ட நடவ டிக்கையும் எடுங்கள்' என்று உத்தரவிட்டுள்ளார். இதைத் தொடர்ந்து கழிவறைக்கு பூட்டு போட்ட உதவி ஆய்வாளர் லதா ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டார்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/LYWjbKaEy206I5aquHTp81

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision