கீ அறக்கட்டளை சார்பில் தூய்மை காவலர்களுக்கான சிறப்பு மருத்துவ முகாம்

கீ அறக்கட்டளை சார்பில் தூய்மை காவலர்களுக்கான சிறப்பு மருத்துவ முகாம்

திருச்சிராப்பள்ளி மாநகராட்சியில் பணிபுரியும் தூய்மைப் காவலர்களின் மகளிர்காண பிரத்யேகமாக இலவச மருத்துவ முகாம், ரெப்கோ ஹோம் ஃபைனான்ஸ் நிறுவனத்தின் CSR நிதி உதவியுடன் நடைபெற்றது.

எடை, உயரம், இரத்த அழுத்தம் போன்றவை அளவிடப்பட்டத்துடன், CBC, HBA1C, சர்க்கரை, தைராய்டு, கொலஸ்ட்ரால், LIPID, PAP, கல்லீரல் மற்றும் சிறுநீரக செயல்பாடு போன்றவைகாக ரத்த பரிசோதனை மற்றும் சிறுநீர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது

இம்முகாமில் திருச்சிராப்பள்ளி மாநகராட்சி துணை மேயர் ஜி.திவ்யா, ரெப்கோ திருச்சி கிளையின் பொது மேலாளர் ஆனந்த், உதவி ஆணையர் சாலை தவவளன், மாநகராட்சியின் சுகாதார அலுவலர், மற்றும் ஆய்வாளர்கள், எஸ்.ஆர்.வேதா நிறுவனத்தின் பிரதிநிதிகள் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தார்கள். ஜே.பி ஹெல்த் அண்ட் ஹாஸ்பிடாலிட்டி ஊழியர்களால் மருத்துவப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது.

அறக்கட்டளையின் அறங்காவலர் ஜோசுவா, தூய்மை காவலர்களின் ஆரோக்கியத்திற்கு முன்னுரிமை அளிப்பதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார். நமது தூய்மை மற்றும் ஆரோக்கியத்திற்காக அயராது உழைக்கும் தூய்மை பணியாளர்களின் ஆரோக்கியத்தை உறுதி செய்வது நமது பொறுப்பு என்றும் அவர்களின் நல்வாழ்வுக்கான பணிகளை செய்ய அறக்கட்டளை முயற்சிகள் எடுக்கும் என்றும் அவர் வலியுறுத்தினார்

சோதனை முடிவுகளின் அடிப்படையில் தொழிலாளர்களுக்கான மருத்துவ ஆலோசனை முகாம் ஆகஸ்ட் 16 ஆம் தேதி நடைபெறும். இன்று அந்தந்த துறைகளில் தேர்ச்சி பெற்ற மருத்துவர்கள் தேவையான மருத்துவ ஆலோசனைகளை வழங்க இருக்கிறார்கள். இன்று முகாமில் 120 பெண்கள் கலந்து கொண்டனர். 2024 ஆகஸ்ட் மாதத்திற்குள் 600 தூய்மை காவலர்களுக்கு மருத்துவ சேவையை வழங்க கீ அறக்கட்டளை திட்டமிட்டுள்ளது.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/Bc1J0GoecHn2ft2JsWCgfU

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision