இரட்டை கொலை வழக்கில் இரண்டு நபர்கள் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது.

இரட்டை கொலை வழக்கில் இரண்டு நபர்கள் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது.

கடந்த (06.07.2024)-ந் தேதி ஸ்ரீரங்கம் காவல்நிலைய எல்லையில் நாகேந்திரன் என்பவர் அதே சமூகத்தை சேர்ந்த தனது அக்கா மகள் என நினைத்து ஒரு பெண்ணிடம் நாம் இருவரும் திருமணம் செய்து கொள்ளலாம் என கேட்டதாகவும், அதற்கு ஆதரவாக மற்றொரு சமூகத்தை சேர்ந்த ஜீவானந்தம் என்பவர் பேசியதாகவும், இதனை மேற்படி பெண் தனது பெற்றோரிடம் தெரிவித்ததன்பேரில் அவர் ஸ்ரீரங்கம் மேலதெருவை சேர்ந்த விக்னேஷ் என்பவரிடம் தெரிவித்ததாகவும், அவர் நாகேந்திரனிடம் சென்று அன்றை தினமே பிரச்சனை செய்துள்ளார்.

அதனை தொடர்ந்து, கடந்த (07.07.24)-ந் தேதி மேற்படி நபர் பிரச்சனை செய்ததை நாகேந்திரன் ஜீவானந்த்திடம் சொல்லியதாகவும், அவர் தனது பகுதியை சேர்ந்த இளைஞர்கள் சிலரை அழைத்துக்கொண்டு திருவளர்ச்சோலையில் உள்ள விக்னேஷின் வீட்டிற்கு சென்று பிரச்சனை செய்தபோது அங்கு நின்றுக்கொண்டிருந்த நபர்களுக்கும் மேற்படி நபர்களுக்கு பிரச்சனை ஏற்பட்டு ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டதாகவும், மேற்படி பிரச்சனையில் ஆயுதத்தால் தாக்கியதில் ஒரு சமூகத்தை சேர்ந்த இளைஞருக்கு காயம் ஏற்பட்டு மருத்துவமனைக்கு அழைத்து செல்லும் வழியில் இறந்துவிட்டார்.

மேலும் ஒருவர் அரசு மருத்துவமனை சிகிச்சையில் பெற்று வந்த நிலையில் இறந்துவிட்டார். மேற்படி இரண்டு நபர்கள் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக கொடுத்த புகாரின்பேரில் வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்குபதிவு செய்து, லால்குடி எசனக்கரை சேர்ந்த அஜெய் (23), த.பெ.ரவிசந்திரன், சரண்ராஜ் (24), த.பெ.உமாநாத் மற்றும் 9 எதிரிகள் கைது செய்யபட்டு நீதிமன்ற காவலுக்கு அனுப்பி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் எதிரிகள் அஜெய் மற்றும் சரண்ராஜ் ஆகியோர்களின் குற்ற நடவடிக்கையை தடுக்கும் பொருட்டு ஸ்ரீரங்கம் காவல் உதவி ஆணையர் கொடுத்த அறிக்கையினை பரிசீலனை செய்து, திருச்சி மாநகர காவல் ஆணையர் ந.காமினி, மேற்படி எதிரிகளை குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின்கீழ் அடைக்க ஆணையிட்டார்.

அதனை தொடர்ந்து எதிரிகள் மீது பிறப்பிக்கப்பட்ட குண்டர் தடுப்பு சட்ட ஆணையினை சார்பு செய்து சிறையில் அடைக்கப்பட்டனர். மேலும் திருச்சி மாநகரில் இதுபோன்ற குற்றங்களில் ஈடுபடும் நபர்கள் மீது சட்டரீதியான கடுமையான நடவடிக்கைகள் தெடர்ந்து மேற்கொள்ளப்படும் என திருச்சி மாநகர காவல் ஆணையர் கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளார்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/Bc1J0GoecHn2ft2JsWCgfU

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision