திருச்சியில் 46 கிலோ சுறா துடுப்பு மற்றும் 6,80,000 மதிப்புள்ள வெளிநாட்டு கரன்சி பறிமுதல்

திருச்சியில் 46 கிலோ சுறா துடுப்பு மற்றும் 6,80,000 மதிப்புள்ள வெளிநாட்டு கரன்சி பறிமுதல்

திருச்சி விமான நிலையத்தில் மலேசியா, சிங்கப்பூர், இலங்கை, துபாய் உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கு விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான பயணிகள் திருச்சி விமான நிலையத்திற்கு வந்து செல்கின்றனர்.

இந்த நிலையில் திருச்சி விமான நிலையத்திலிருந்து ஏர் இந்தியா விமான மூலம் சிங்கப்பூருக்கு செல்ல இருந்த பயணிகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். ஒரு பயணியிடம் சுறா மீன் துடுப்புகள் மற்றும் யூரோ, சிங்கப்பூர் டாலர்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இந்திய ரூபாய் மதிப்பு ரூபாய் 6,80,000 மதிப்புள்ள வெளிநாட்டு கரன்சிகள் மற்றும் 46 கிலோ 580 கிராம் சுறா துடுப்புகளை வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/Bc1J0GoecHn2ft2JsWCgfU

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision