சர்வதேச பூமி தினம் - விழிப்புணர்வு பேரணி
திருச்சி மாவட்ட துறையூரில் உள்ள தனியார் வேளாண்மை மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி மாணவர்கள் கிராமத்தில் தங்கி பயிற்சி பெறும் திட்டத்தின் கீழ் தண்டலைபுதுர் கிராமத்தில் களப்பணி ஆற்றி வருகின்றனர். சர்வதேச பூமி தினத்தை முன்னிட்டு சுற்றுசூழல் பாதுகாப்பு மற்றும் வேளாண்மை முக்கியத்துவம் குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், தண்டலைபுத்தூர் தலைமை ஆசிரியர் லதா மற்றும் மாணவர்கள், ஊர் பொது மக்கள் மற்றும் இளைஞர்களுடன் இணைந்து பேரணி நடைபெற்றது.
பேரணியின் போது அனைவரும் விவசாயம் என்பது வியாபாரம் அல்ல வாழ்கையின் முறை, விதைத்து கொண்டே இரு முளைத்தால் மரம் இல்லையேல் மண்ணிற்கு உரம், மரம் வளர்ப்போம் மழை பெறுவோம் மற்றும் நெகிழியை தவிர்ப்போம் மண்வளம் காப்போம் ஆகிய வாசகங்கள் கொண்ட அட்டைகளை ஏந்தி கிராமத்தின் முக்கிய வீதிகளில் வழியாக பேரணி வந்தனர். மாணவர்களுக்கு உற்சாகம் ஊட்டும் வகையில் அவர்களுக்கு விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டது.
மேலும் வேளாண்மை கல்வி பயிலும் மாணவர்கள்ஏ. பிரேம்குமார், அ.கிஷோர், வெ.மணிகண்டன், சி.மணிகண்டன், சை.முகமது அபு சாலிகு, பா.நந்தகுமார், ரெ.மனோஜ், வி.செ.மெர்வின் பாலாஜி, ரெ.லட்சுமி நாராயணன், வி.பி.லோகேஷ் ஆகியோர் இணைந்து பூமியின் இன்றைய நிலை குறித்து நாடகம் நடத்தி பள்ளி மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இறுதியாக மரக்கன்றுகள் நடப்பட்டது. மேலும் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. பின் அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டது.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/EOjjjDwQWZa8HOTrrk6ttd
#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision