டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி மோதியதில் மின் கம்பங்கள், கடைகள் சேதம்

டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி மோதியதில் மின் கம்பங்கள், கடைகள் சேதம்

கேரளா மாநிலம், இடுக்கி மாவட்டம், ராஜகுமாரி பகுதியை சேர்ந்தவர் பினில் (35) லாரி டிரைவராக வேலை பார்த்து வருகிறார். இவர் இன்று பெரம்பலூரில் லோடு ஏற்றுவதற்காக நாமக்கல்லில் இருந்து தொட்டியம் வழியாக முசிறி நோக்கி லாரியை ஓட்டி வந்துள்ளார்.

அப்போது திருச்சி - நாமக்கல் மெயின் ரோட்டில் தொட்டியம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அருகே வந்து கொண்டிருந்தபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலை ஓரத்தில் இருந்த உணவகம், பெட்டி கடைகள் மற்றும் மின்கம்பங்கள் மீது மோதி உள்ளது. இந்த சம்பவத்தில் சாலையோரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 2 மொபட்டுகள், மூன்று மின் கம்பங்கள் மற்றும் உணவகம், பெட்டி கடைகள் முன்பகுதி சேதம் அடைந்தது.

மின் கம்பத்தில் இருந்த கம்பிகள் அறுந்து விழுந்ததால் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த மின்வாரிய பணியாளர்கள் விரைந்து வந்து அப்பகுதியில் மின்சாரத்தை துண்டித்து மின் கம்பங்களை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

இதையடுத்து தொட்டியம் போலீசார் லாரி டிரைவர் பினில் என்பவர் குடிபோதையில் வாகனத்தை ஓட்டி வந்தாரா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இன்று ஞாயிற்றுக்கிழமை கடைகள் மூடப்படிருந்ததால் பெரும்விபத்து தவிர்க்கப்பட்டது.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/Bc1J0GoecHn2ft2JsWCgfU

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision