திருச்சியில் 10 ஆண்டுகளில் இல்லாத நிலை வெங்காயம் ரூ. 5-க்கு விற்பனை

திருச்சியில் 10 ஆண்டுகளில் இல்லாத நிலை வெங்காயம் ரூ. 5-க்கு விற்பனை

திருச்சி பழைய பால்பண்ணை அருகே உள்ள வெங்காயம் மண்டிக்கு நாள் ஒன்றுக்கு 300 டன் பெரிய வெங்காயம் தேவையுள்ளது. கடந்த ஒரு மாத காலமாக எல்லா மாநிலங்களிலும் விளைச்சல் அதிகமாக இருப்பதால், 500 டன் ஒரு நாளைக்கு வருகிறது. பெரிய வெங்காயத்தின் விலை ஐந்து ரூபாயில் இருந்து 15 ரூபாய் வரை மொத்த விற்பனை செய்யப்படுகிறது. 

300 டன் இருந்தாலே திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களுக்கு போதுமானதாக இருக்கும். ஆனால் பெரிய வெங்காயம் 500 டன் வருகிறது. மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம், பீகார்,குஜராத், கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் நல்ல விளைச்சல் விவசாயிகள் அதிக அளவில் பெரிய வெங்காயத்தை உற்பத்தி செய்து விட்டனர்.

இதனால் இந்த விலை மலிவு ஏற்பட்டுள்ளது. இன்னும் ஒரு மாத காலத்திற்கு இந்த விலை வீழ்ச்சி நிலை நீடிக்கும். மகாராஷ்டிரா உள்ளிட்ட மாவட்டங்களில் அதிக விளைச்சல் இருப்பதால் விவசாயிகள் வெங்காயத்தை கொட்டி எரிக்க கூடிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இதற்கு மத்திய அரசும் அந்தந்த மாநில அரசுகளும்

விவசாயிகளுக்கு உரிய உதவித்தொகை இழப்பீடு கொடுத்து உதவ வேண்டும் என வியாபாரிகள் சார்பாக கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது .10 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பெரிய வெங்காயத்தின் விலையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. இன்னும் ஒரு மாத காலத்திற்கு இந்த விலை தொடரும் என குறிப்பிட்டனர்.

திருச்சியை பொறுத்த அளவு சின்ன வெங்காயம் 70 ரூபாயிலிருந்து 80 ரூபாய் விற்கப்பட்டு வந்தது. தற்போது முப்பது ரூபாயில் இருந்து 40 ரூபாய் ஆக மொத்த விற்பனையாகி வருகிறது. சின்ன வெங்காயத்தின் விலையும் இன்னும் ஒரு இரண்டு மாதத்திற்கு இதை நிலை தொடரும். விவசாயிகளை காப்பாற்ற அந்தந்த மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திருச்சி வெங்காய தரகு மண்டி செயலாளர் தங்கராஜ் தகவல் தெரிவித்துள்ளார்.

# திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய https://chat.whatsapp.com/CVEI9HGZeZI6ualvRGNLGP

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision