நெல்லின் ஈரப்பதம் குறித்து மத்திய குழுவினர் திருச்சியில் இன்று நேரில் ஆய்வு

நெல்லின் ஈரப்பதம் குறித்து மத்திய குழுவினர்  திருச்சியில் இன்று நேரில் ஆய்வு

 திருச்சிராப்பள்ளி மாவட்டம்,  லால்குடி வட்டம்,  ஜெங்கமராஜபுரம், ஆலங்குடி மகாஜனம், செம்பரை,  திண்ணியம் ஆகிய இடங்களில் உள்ள நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்படும் நெல்லின் ஈரப்பதத்தின் தற்போதைய நிலையை உயர்த்தி கொள்முதல் செய்வது தொடர்பாக மத்திய அரசின் உணவு விநியோகம் மற்றும் நுகர்வோர் விவகாரங்கள் துறையின் துணை இயக்குனர் இசட். கான் தலைமையிலான குழுவினர்  .யூனூஸ் (தொழில்நுட்பம்) , இந்திய உணவுக் கழகத்தின் உதவி பொது மேலாளர்   குணால் குமார், திரு கணேசன் (தரக் கட்டுப்பாடு),  தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக  முதல் நிலை மேலாளர் ( தரக் கட்டுப்பாடு)   செந்தில்  ஆகியோர் இன்று (17.10.22)  நேரில் பார்வையிட்டு கொள்முதல் செய்யப்படும் நெல்லின் ஈரப்பதம் குறித்து ஆய்வு செய்து,  விவசாயிகளிடமும், அலுவலர்களிடமும் கேட்டறிந்தனர்.

இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சித் தலைவர்  மா. பிரதீப் குமார்,  உடன் சென்று இது தொடர்பான விவரங்களை இக்குழுவினரிடம் விவரமாக எடுத்துரைத்தார். உடன்  தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக மண்டல மேலாளர் திரு எம் பாலமுருகன், வருவாய் கோட்டாட்சியர் வைதியநாதன் உள்ளிட்ட  அலுவலர்கள் உடனிருந்தனர்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய...  https://chat.whatsapp.com/I1qYhcBomJGKR4Fi6km3h0


#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.co/nepIqeLanO