softball போட்டிக்கு தகுதி பெற்று ஜப்பான் நாடு சென்றுள்ள திருச்சி மாணவன்

softball போட்டிக்கு தகுதி பெற்று ஜப்பான் நாடு சென்றுள்ள திருச்சி மாணவன்
தமிழ்நாட்டின் திருச்சிராப்பள்ளி மாவட்டத்தைச் சேர்ந்த மாஸ்டர். ஆர்.கே.அல்ட்ரிக் ஜெய பிரகாஷ் திருச்சி கே.கே.நகர் SBIOA சீனியர் செகண்டரி பள்ளியில் பதினொன்றாம் வகுப்பு பயின்று வருகிறார்.

ஜூன் 23 முதல் 25 வரை ஜப்பான் நாட்டின் கோச்சி நகரில் நடைபெறும் பதினெட்டு வயதிற்கு உட்பட்ட ஆசியக் கோப்பை  ஆண்கள் சாப்ட்பால் சாம்பியன்ஷிப் போட்டியில் விளையாடும் இந்திய அணிக்கு அவர் தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஏழாம் வகுப்பு முதல் சாப்ட் பால் விளையாடிவரும் இவர் மாவட்ட,மாநில,தேசிய அளவில் நடைபெற்ற சாப்ட் பால் போட்டிகளில் கலந்து கொண்டு தொடர்ந்து விளையாடி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதன் மூலமாக சாப்ட்பால் விளையாட்டில் பெரிய முன்னேற்றம் அடைந்துள்ளார்.
முன்னதாக இவர் ஆந்திரப் பிரதேசத்தின் அனந்த்பூர், ஜல்கோன், மகாராஷ்டிரா மற்றும் பாண்டிச்சேரி ஆகிய இடங்களில்  சாப்ட்பால் அசோசியேஷன் ஆஃப் இந்தியா நடத்திய  பல்வேறு பயிற்சி முகாம்களில் கலந்து கொண்ட பிறகு இந்திய அணிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார். குறிப்பாக தமிழ்நாட்டில் இருந்து இரண்டாவது சாப்ட்பால் வீரராக இந்திய அணிக்கு தேர்வு செய்ப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ்நாடு சாப்ட் பால் சங்கத் தலைவர் பாலா, பொதுச்செயலாளர் மாதவன் ஆகியோர் அல்ட்ரிக் ஜெய பிரகாஷ் வாழ்த்துத் தெரிவித்து, தமிழகத்தில் சாப்ட்பால் விளையாட்டின் வளர்ச்சிக்கும், மேம்பாட்டிற்கும் தமிழ்நாடு விளையாட்டுக் கழகம் தங்களால் இயன்ற ஆதரவை வழங்கி வருகிறது என்று கூறி இது போன்று ஒவ்வொரு மாணவரும் சாப்ட் பால் விளையாட்டில் தங்களது திறமைகளை வெளிப்படுத்த வேண்டும் என்று கூறினர். இந்திய சாப்ட்பால் அசோசியேஷன் ஆஃப் இந்தியாவின் அமைப்பின் கீழ், இந்திய தேசிய சாப்ட்பால் அணி, ஜூன் (21, 2023) அன்று

புது தில்லியிலிருந்து ஜப்பானுக்குச் செல்லும் அணியில் இடம் பெற்றுள்ள மாஸ்டர் அல்ட்ரிக் ஜெய பிரகாஷ், திருச்சிராப்பள்ளி மாவட்ட சாப்ட்பால் சங்கத் தலைவர் திரு. டி.ஜே. வெங்கடேஷ் துரை,செயலாளர் திரு.ஆர்.சரவணன்  SBIOA பள்ளிகளின் தாளாளர் கணபதி சுப்ரமணியம், பள்ளியின் முதல்வர் சகுந்தலா சுந்தரம், பயிற்சியாளர் சூர்யா, பள்ளியின் உடற்கல்வித்துறை ஆசியரியர்கள், பிற ஆசிரியர்கள் வாழ்த்து கூறி வழியனுப்பி வைத்தனர்.