அதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு திருச்சி மண்டல புதிய நிர்வாகிகள் நியமனம்

அதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு திருச்சி மண்டல புதிய நிர்வாகிகள் நியமனம்

அதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவின் திருச்சி மண்டலங்களுக்கு புதிய நிர்வாகிகளை நியமனம் செய்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். அதன்படி திருச்சி மண்டல தகவல் தொழில் நுட்பப்பிரிவு நிர்வாகிகள் விவரங்கள் : திருச்சி புறநகர் தெற்கு மாவட்டம் சங்கிலியாண்டபுரத்தை சேர்ந்த எம். சுரேஷ்குமார் தலைவராகவும், திருச்சி புறநகர் வடக்கு மாவட்டம் முசிறி தாலுகா மாவிலிப்பட்டியை சேர்ந்த எம்.வி.கவி அரசு துணைத்த லைவராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

செயலாளராக புதுக்கோட்டை வடக்கு மாவட்டம் விராலிமலை சாலைப்பள்ளம் பகுதியை சேர்ந்த எம். மணிகண்டன், இணைச் செயலாளராக திருச்சி புறநகர் வடக்கு மாவட்டம் ஸ்ரீரங்கத்தை சேர்ந்த எஸ்.திருப்புகழ் செல்லத்துரை, புதுக்கோட்டை வடக்கு மாவட்டம் மச்சுவாடி பகுதியை சேர்ந்த எம்.சதீஷ்குமார் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். 

துணைச்செயலாளர்களாக அரியலூர் மாவட்டம் எத்திராஜ் நகரை சேர்ந்த கே.கோபாலகிருஷ்ணன், திருச்சி புறநகர் வடக்கு மாவட்டம் மண்ணச்சநல்லூரை சேர்ந்த ஏ.திருநாவுக்கரசு, திருச்சி மாநகர் மாவட்டம் மூவேந்தர் நகரை சேர்ந்த ஆர். வேங்கடநாதன், பொருளாளராக பெரம்பலூர் மாவட்டம் செந்துறையை சேர்ந்த அறிவு அரவிந்தன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...

 https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO

#டெலிகிராம் மூலமும் அறிய....

https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision