திருச்சி புத்தகத் திருவிழா - அலைமோதும் வாசகர்கள்

திருச்சி புத்தகத் திருவிழா - அலைமோதும் வாசகர்கள்

திருச்சிராப்பள்ளி மாவட்டம், சத்திரம் பேருந்து நிலையம் அருகில் உள்ள செயின்ட் ஜோசப் பள்ளி மைதானத்தில் 2வது நாளாக பிரம்மாண்டமாக நடைபெற்று வரும் திருச்சி புத்தகத் திருவிழா 2023ல் புத்தக அரங்குகள் மற்றும் கலை நிகழ்ச்சிகளை நேற்று (24.11.2023) ஏராளமான பொதுமக்கள், மாணவர்கள் வருகை தந்து பார்வையிட்டனர்.

தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் சார்பில் அமைக்கப்பட்டுள்ள கோளரங்கத்தையும், மாணவர்களுக்காக வான் நோக்குதல் காட்சிப்படுத்தப்பட்டுள்ளதையும் ஏராளமான மாணவர்கள் கண்டு களித்தனர். நேற்று நடைபெற்ற உரைவீச்சு நிகழ்ச்சியில் எழுத்தாளர் பேராசிரியர் திரு.கரு.ஆறுமுகத்தமிழன் அவர்கள் "கற்றதனால் என்ன பயன்" என்ற தலைப்பில் விரிவான சொற்பொழி ஆற்றினார். அதனைத் தொடர்ந்து சிறார் சிறப்பு அரங்கம் சார்பில் கார்த்திகா கவின் குமார் அவர்கள் "கதை சொல்லி" கதை “கதையாம் காரணமாம்" வித்யா தன்ராஜ் அவர்களின் கதை சொல்லி கதை சொல்லல் மற்றும் பயிற்சி என்ற தலைப்பிலும், பல்கலைக்கழக மாணவி ச.மாரியம்மாள் அவர்களின் கவிதை மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. டவுன்ஹால் அரசினர் மேல்நிலைப்பள்ளி, சிறுகாம்பூர் அரசினர் மேல்நிலைப்பள்ளி, செயின்ட் ஜோசப் கவின்கலைக் கல்லூரி மாணவ, மாணவியர்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

திருச்சி புத்தகத் திருவிழா 2023ல் இன்று (25.11.2023) அறிவியல் அறிஞர் முனைவர்த.வி.வெங்டேஸ்வரன் அவர்களின் "சூரியனுக்கு போகும் ஆதித்யா" என்ற தலைப்பில் உரைவீச்சு நடைபெறவுள்ளது. சிறார் சிறப்பு அரங்கம் சார்பில் குழந்தைகள் நாடகக்கலைஞர் முனைவர் வேலுசரவணன் அவர்களின் "குதூகல தொடக்கம்" என்ற நிகழ்ச்சியும், கவிதை நேரம் நிகழ்ச்சியில் கவிஞர் கோ.கலிய மூர்த்தி அவர்களின் கவியரங்கம் மற்றும் கலை நிகழ்ச்சிகள்  நடைபெறவுள்ளது.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...

 https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO

#டெலிகிராம் மூலமும் அறிய....

https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision