பேராசிரியர் கழுத்தில் அணிந்திருந்த 7 பவுன் தங்க தாலி செயினை வழிப்பறி செய்த நபர் கைது

பேராசிரியர் கழுத்தில் அணிந்திருந்த 7 பவுன் தங்க தாலி செயினை வழிப்பறி செய்த நபர் கைது

கடந்த 19.02.2020-ந்தேதி கே.கே.நகர்; காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ரஞ்சிதபுரம் பேருந்து நிறுத்தம் அருகில் நடந்து சென்ற அரசு பாலிடெக்னிக் கல்லூரி பெண் பேராசிரியர் ஒருவரின் கழுத்தில் அணிந்திருந்த சுமார் 7 பவுன் தங்க தாலி செயினை இருசக்கர வாகனத்தில் வந்த மர்மநபர் பறித்து சென்றதாக பெறப்பட்ட புகாரை பெற்று, கே.கே.நகர் குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இதற்கு தனிப்படை அமைக்கப்பட்டு, தீவிர புலன் விசாரணை செய்யப்பட்டடது.
மேலும் தனிப்படையின் புலன் விசாரணையில் சந்தேக நபர்களின் நடவடிக்கையை தீவிரமாக கண்காணித்தும், சந்தேக நபர்களின் அலைபேசி எண்களின் விபரங்களை சேகரித்து தொடர்ந்து விசாரணை செய்யப்பட்டு வந்தது.

இவ்வழக்கு தொடர்பாக நேற்று காஜாமலை பகுதியில் வாகன சோதனை செய்தபோது வழக்கில் சம்மந்தப்பட்ட எதிரி ராகுல் (21) என்பவரை சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரணை செய்தபோது, மேற்கண்ட வழக்கில் வழிப்பறி செய்ததை ஒப்புக்கொண்டவரை, கைது செய்தும், வழக்கு சொத்தான ரூ.2,50,000/- மதிப்புள்ள 7 பவுன் தங்க நகைகள் மீட்கப்பட்டு, வழக்கின் எதிரி நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டார்.

மேற்கண்ட வழக்கில் சிறப்பாக பணியாற்றி துரிதமாக புலன்விசாரணை செய்து எதிரியை கைது செய்த காவல் உதவி ஆணையர் கே.கே.நகர் சரகம் மற்றும் கே.கே.நகர் குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் மற்றும் புலன் விசாரணையில் துணையாக இருந்த காவல் ஆளிநர்களை திருச்சி மாநகர காவல் ஆணையர் கார்த்திகேயன் வெகுவாக பாராட்டினார்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....
https://chat.whatsapp.com/HdeP1M74dJnKdGrH0YxsTa

#டெலிகிராம் மூலமும் அறிய..
https://t.co/nepIqeLanO