தேசிய வாக்காளர் தினம் - மாநகராட்சியில் உள்ள 65 வார்டுகளில் பகுதி சபா கூட்டம்
திருச்சிராப்பள்ளி மாநகராட்சியின் 5வது மண்டலத்துக்குட்பட்ட 27வது வார்டு மூலைக் கொல்லை தெரு மாநகராட்சி உருது நடுநிலைப்பள்ளியில் நடைபெற்ற பகுதி சபா கூட்டத்திற்கு மேயர் மு.அன்பழகன் தலைமை வகித்து உதவி ஆணையர் சென்னுகிருஷ்ண முன்னிலையில் பொதுமக்களிடம் கோரிக்கைகளை கேட்டறிந்து மனுக்களை பெற்றார்.
இந்தக் கூட்டத்தில் மூலக்கொல்லைத் தெரு, வள்ளுவர் தெரு, சவேரியார் கோவில் தெரு, மல்லிகைபுரம் , ஜெனரல் பஜார், வண்ணாரப்பேட்டை, ஜெனரல் பஜார், பென்சனர், தென்னூர், தெருபட்டாபிராமன் பிள்ளை தெரு ஆகிய பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் பல் வேறு கோரிக்கைகள் தொடர்பாக மனுக்களை மேயரிடம் அளித்தனர்.
பொதுமக்கள் அளித்த 52 மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என மேயர் தெரிவித்தார். முன்னதாக மேயர் மு. அன்பழகன் 27வது வார்டு பகுதிகளுக்கு முடிவுற்ற திட்ட பணிகளையும், நலத்திட்டங்களையும் மற்றும் நடைபெற்றுக் கொண்டிருக்கும் திட்ட பணிகளையும் பொதுமக்களிடம் விளக்கமாக எடுத்துரைத்தார்.
திருச்சிராப்பள்ளி மாநகராட்சி 65வார்டு பகுதிகளிலும் துணை மேயர், மண்டல தலைவர்கள், மாமன்ற உறுப்பினர்கள், பொறியாளர்கள், உதவி ஆணையர்கள், நிர்வாக அலுவலர்கள், உதவி வருவாய் அலுவலர்கள் ஆகியோர் முன்னிலையில் அந்தந்த வார்டுக்கு உட்பட்ட பகுதி சபா கூட்டம் நடைபெற்று பொதுமக்களிடம் பல்வேறு கோரிக்கை மனுக்களை பெற்றனர். தகுதியுள்ள மனுக்களுக்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்கள்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/H58t6nW18bYCrFMtKLqSfu
#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision