சோப், மாஸ்க், சானிடைசர் போன்ற நோய் தடுப்பு பொருட்கள் வழங்கிய திருச்சி சரக காவல்துறை துணைத் தலைவர்.

சோப், மாஸ்க், சானிடைசர் போன்ற நோய் தடுப்பு பொருட்கள் வழங்கிய திருச்சி சரக காவல்துறை துணைத் தலைவர்.

திருச்சி சரக காவல்துறை துணைத் தலைவர் Z.ஆனி விஜயா தனது அலுவலகத்தில் உள்ள அலுவலர்கள், துப்புரவு பணியாளர்கள், மற்றும் ஊரடங்கு கட்டுப்பாடுகளை சாலைகளில் நின்று கவனிக்கும் காவல்துறையினருக்கு நீம் சோப், மாஸ்க், சேனிடைசர், உணவு பொருள் வழங்கினார்.

இது குறித்து அவர் கூறியதாவது, இன்றைய காலகட்டத்தில் நோய் தடுப்பு பணிகளில் ஈடுபடுபவர்களுக்கு திருச்சி சரக காவல்துறை சார்பாக சோப், மாஸ்க், சேனிடைசர் உணவு பொருட்கள் வழங்கினோம்.

இன்று வழங்கிய சோப் ஆரன்யா ஆர்கானிக்ஸ் என்ற நிறுவனத்தில் பெண்களால் தயாரிக்கப்பட்ட Hand made soap இது போல் பல தன்னார்வலர்கள் மூலம் தமிழக அரசியல்வாதி வழிகாட்டுதலை பின்பற்றி எங்களால் இயன்றளவு நோய் தடுப்பு பணிகளை செய்து வருகிறோம்.

மக்களும் எங்களுக்கு முழு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டுகிறோம் என்றார். திருச்சி சரக காவல்துறை துணைத் தலைவர் Z.ஆனி விஜயா காவல்துறை பணியில் இணைந்து இன்று 26ஆம் ஆண்டு தொடங்குகிறது. அவரது மக்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய!
https://chat.whatsapp.com/I7AbpT9vFZAKjl63kSeYJx