வீடுகளில் கறுப்பு கொடி ஏற்றி விவசாயிகள் போராட்டம்.

வீடுகளில் கறுப்பு கொடி ஏற்றி விவசாயிகள் போராட்டம்.

மத்திய அரசின் 3 வேளாண் விரோத சட்டங்களை திரும்ப பெறவும், குறைந்த பட்ச ஆதார விலையை சட்டமாக்க கோாியும்   டெல்லியில் விவசாயிகள் போராட்டம் தொடங்கி இன்றுடன் 6 மாத காலம் நிறைவு பெறுகிறது.

கொட்டும் பனியிலும், கொளுத்தும் வெயில்லும் போராடிய விவசாயிகள் தற்போது பெய்து வரும் பெரும் மழையிலும் தொடா்ந்து போராட்டத்தை நடத்தி வருகின்றனா்.

இது நாள் வரை 500க்கும் மேற்பட்ட விவசாயிகள் தொடா் போராட்டம் நடத்தி வருகின்றனா். காா்ப்பரேட்களின் நலனை மட்டுமே குறிக்கோளாக கொன்ட மோடி அரசு விவசாய விரோத சட்டங்களை திரும்ப பெற மறுத்து வருவதோடு தொடா்ந்து விவசாய விரோத நடவடிக்களை எடுத்து வருகிறது. விவசாயிகளுக்கு  விரோதமான மோடி ஆட்சி அமைந்தும் மே 26ந் தேதியோடு 7 ஆண்டு நிறைவு பெறுகிறது. இந்த நாளை கறுப்பு தினமாக அறிவித்து அணைத்து வீடுகளிலும் கறுப்பு கொடி ஏற்றுமாறு அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்பு குழு அறிவித்திருந்தது.

இன்று திருச்சி மாவட்டத்தில் திருச்சி மாநகரம் மற்றும்  அந்தநல்லூா், மணிகன்டம், துறையூா், மணப்பாறை, லால்குடி, உப்பியபுரம், முசிறி உள்ளிட்ட அணைத்து ஒன்றிய பகுதிகளிலும் ஆயிரகணக்கான வீடுகள், கட்சி அலுவலகங்களில் கறுப்பு கொடி ஏற்றப்பட்டது.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய!
https://chat.whatsapp.com/I7AbpT9vFZAKjl63kSeYJx