மரங்களை மறக்கும் மனிதன் - அடுத்த தலைமுறையை காக்க போவது மரம் - சத்தீஸ்கர் கலெக்டர் திருச்சி மாநாட்டில் பேச்சு

மரங்களை மறக்கும் மனிதன் - அடுத்த தலைமுறையை காக்க போவது மரம்  - சத்தீஸ்கர் கலெக்டர் திருச்சி மாநாட்டில் பேச்சு

மர ஆர்வலர்களின் மரம் மழை மகிழ்ச்சி மாநில மாநாடு மற்றும் கருத்தரங்கு திருச்சி ஸ்ரீரங்கத்தில் இரண்டு நாட்கள் நடைபெறுகிறது. பசுமை சிகரம் கட்டளை விதைகள் யோகநாதன் தலைமை தாங்கினார். முதல் நாளான இன்று சாலையோர மரங்கள் வளர்ப்பு மக்களின் பங்கு அரிய வகை மரங்கள் மீட்டெடுப்பு காடுகள் மறுஉருவாக்கம் குறித்த தலைப்புகளில் மாவட்ட ஆட்சித் தலைவர்களும் இயக்குனர்களும் சிறப்புரையாற்றினர்கள்.

அதன்பின் மரங்களும் மனிதர்களும் எவ்வளவு வாழ்க்கையில் ஒன்றிப்போய் வாழ்ந்து வருவதை  சத்தீஸ்கர் மாநில சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை செயலர் மருத்துவர் பிரசன்னா ஐ.ஏ.எஸ் விளக்க உரையாற்றினார். அப்போது பேசிய அவர்.... அழியும் நிலையில் உள்ள அரிய வகை மரங்களை தேடி கண்டுபிடித்து அதை அடுத்த தலைமுறைக்கும் அந்த மரங்களை கொண்டு செல்ல வேண்டும் என்பதே  நோக்கம்.

மனித பரிணாம வளர்ச்சிக்கு முன்பே தோன்றியது மரங்கள்! எல்லா வகையிலும் மரங்கள் நமக்கு உதவுகிறது ஆனால் நாம் அவற்றை அப்படியே வளரச் செய்வதே அவற்றிற்கு நாம் செய்யும் உதவி என்றார். உணவு உடை இவையிரண்டும் இன்றியமையாதவை ஆதிகாலத்தில் இருந்து மரங்கள் இவை இரண்டிற்கும் பயன்படும் வகையில் பயன்படுத்தப்பட்டு உள்ளது ஒவ்வொரு நோய்க்கும் மருந்து ஒவ்வொரு மரத்திலிருந்தும் கிடைத்தது.

பறவைகள், மாடுகள், ஆடுகள் உண்ணும்    மரப் பட்டைகளில் இருந்தாலும் ஒவ்வொரு மருந்துகளை கண்டறிந்து பல நோய்களுக்கு மருந்துகளை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்தனர் என குறிப்பிட்டார். ஒவ்வொரு மரத்திற்கும் ஒவ்வொரு தனித்தன்மை உண்டு  ஒரு வகையில் ஒரு உதவியா தான் இருக்கின்றனர். எடுத்துக்காட்டாக பலா மரத்தை எடுத்துக்கொண்டால் இரட்டைவால் குருவி மட்டுமே கூடு கட்டும் பருந்துடன் சண்டையிடும் என்பதால் அதனை சுற்றி 40 குருவிகள் இருக்கும். உயிர்காக்கும் மரமாகவே வன்னிமரம் இருக்கின்றது. மகாபாரதத்தில் வனவாசம் செல்லும் பொழுது பாண்டவர்கள்கூட ஒரு வருடம் அந்ஞாதவாசம் செல்லும் பொழுது ஆயுதங்களை வன்னி மரத்தடியிலேயே வைத்து சென்றனர்.

திரும்பி வரும்பொழுது ஆயுதங்கள் அப்படியே இருக்கும் என்பதற்காகவே அவ்வாறு செய்தனர். அப்படி ஒரு புகழ்பெற்றது வன்னி மரம்! இந்த மரம் வளர்வதற்கு 25 ஆண்டுகளுக்கு மேல் எடுத்துக் கொள்ளும் ஒரு தலைமுறையில் ஒரு மரத்தை வெட்டினால் அடுத்த தலைமுறை இந்த மரத்தை பார்ப்பதற்கான வாய்ப்புகளே இல்லை என்பதால் ஒரு சமூகத்தினர் இதனை பாதுகாத்து வருகின்றனர். இலுப்பை மரம் ஒரு கோவிலை கட்ட தொடங்கும் போது  மரத்தை வளர்க்க தொடங்குவர். கோயில் கட்டி முடித்த பின்னர் இலுப்பை மரத்திலிருந்து எடுக்கப்பட்ட எண்ணெய் மூலம்  கோயிலுக்கு விளக்கேற்றுவர் என தெரிவித்தார்.

இப்படி ஒவ்வொரு மரத்திற்கு பின்னாலும் ஒவ்வொரு வரலாறு இருக்கின்றது வரலாற்றை நம் அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் சொல்வது என்பது அவசியமாகும் இன்றைக்கும் பல ஊர்களின் பெயர்கள் நாம் அறிந்திருக்கிறோம் அப்படி ஒவ்வொரு மரங்களின் தன்மையையும் மரங்களின் பெயர்களை நாம் மறக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது இவற்றையெல்லாம் காக்க வேண்டியது நம் ஒவ்வொரு உருடைய கடமையாகும் என மரம் மனிதவளத்தை பாதுகாத்து வருவதை அழுத்தமாக பேசினார். இந்த இரண்டு நாள் மாநில மாநாட்டை பசுமை சிகரம் அறக்கட்டளை யோகநாதன் ஏற்பாடு செய்திருந்தார்.

முன்னதாக மரம் வளர்ப்பு குறித்த உறுதிமொழி எடுக்கப்பட்டது. இம்மாநாட்டில் தண்ணீர் அமைப்பு நீலமேகம், சதீஷ்குமார், ஆர் கே ராஜா, உள்ளிட்டோரும் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மற்றும் பனானா லீஃப் உணவகம் உரிமையாளர் மனோகரன், கோபால்தாஸ் ஜூவல்லர்ஸ் தில்ஜித் ஷா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய...
https://chat.whatsapp.com/GgA8w690Wqd7IwIEsO6ZZ5

#டெலிகிராம் மூலமும் அறிய..
https://t.co/nepIqeLanO