ஸ்ரீரங்கம் அரங்கநாதர் சுவாமி திருக்கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி மாதத்தில் 11 நாட்கள் ஆதி பிரம்மோற்சவம் எனப்படும் பங்குனி தேர் உற்சவம் நடைபெறுவது வழக்கம் அதன்படி இந்த ஆண்டிற்கான உற்சவம் 10ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.உற்சவ நாட்களில் நம்பெருமாள் தினமும் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா நடைபெறும் அதன்படி 8ஆம் நாளான இன்று இரவு நம்பெருமாள் தங்க குதிரை வாகனத்தில் எழுந்தருளி வையாளி கண்டு அருளினார்.
இதற்காக நம்பெருமாள் மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்டு நான்கு சித்திரை வீதிகளில் தங்க குதிரை வாகனத்தில் வலம் வந்தபின் கோரதம் எனப்படும் பங்குனி தேர் அருகே வையாளி போடும் நிகழ்வு நடைபெற்றது. அப்பொழுது அங்கு கூடியிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் ரெங்கா ரெங்கா என பக்தி பரவசத்துடன் வணங்கி வழிபட்டனர்.
பங்குனி தேர் உற்சவத்தின் முக்கிய நிகழ்ச்சியான ஸ்ரீரங்கம் ரெங்கநாயகி தாயார் நம்பெருமாள் சேர்த்தி சேவை (இன்று)18-ஆம் தேதி நடைபெற உள்ளது கோரதம் என கூறும் பங்குனி தேர் உற்சவம் 19ஆம் தேதி அன்று நடைபெற இருக்கின்றது என்பது குறிப்பிடத்தக்கது.