மலைக்கோட்டை தாயுமானசுவாமி பங்குனித் தெப்பத்திருவிழா

மலைக்கோட்டை தாயுமானசுவாமி பங்குனித் தெப்பத்திருவிழா

தென்கயிலாயம் என்று போற்றப்படுவதும், திருச்சிக்கு பெருமை சேர்ப்பதும், புகழ் பெற்றதுமான திருச்சி மலைக்கோட்டை மட்டுவார்குழலம்மை உடனுறை தாயுமானசுவாமி ஆலயம் மிகவும் பிரசித்தி பெற்றதாகும். இக்கோயிலில் பங்குனி உத்திரத்திருவிழா வெகுவிமரிசையாகக் கொண்டாடப்படும். கடந்த 9ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கிய விழாவின் 9ம் நாளான நேற்று தெப்பத்திருவிழா வெகுவிமரிசையாக நடைபெற்றது.

முன்னதாக தாயுமானசுவாமி (சிவபெருமான்) உடனுறை மட்டுவார் குழலம்மை மற்றும் அம்பாளுடன் வாகன மண்டபத்திலிருந்து புறப்பட்டு உள்வீதி, சின்னக்கடைவீதி, என்.எஸ்.பி ரோடு வழியாக வீதி உலா வந்து தெப்ப தீர்த்தக் குளத்தை வந்தடைந்து. அங்கு வண்ணமயமாக மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்த தெப்பத்தில் விநாயகர் மற்றும் முருகன் வள்ளி தெய்வாணையுடன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

பின்னர் தெப்பமானது தெப்பக்குளத்தில் 5 முறை வலம் வந்து ஆண்டாள் வீதிவழியாக ஆலயத்தை சென்றடைந்தது. தெப்பத்தைச் சுற்றிலும் சூழ்ந்திருந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி, அம்பாளை வழிபட்டுச் சென்றனர். விழாவிற்கான ஏற்பாடுகளை அறநிலையத்துறையினர் மற்றும் கோவில் நிர்வாகத்தினர் மேற்கொண்டிருந்தனர்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....
https://chat.whatsapp.com/EBWOGQoz6UK760TTm5WwQK

#டெலிகிராம் மூலமும் அறிய...
https://t.co/nepIqeLanO