கடந்த 9 மாதங்களாக குவைத்தில் வேலையிழந்து தவித்த 32 நபர்கள் மீட்பு

கடந்த 9 மாதங்களாக குவைத்தில் வேலையிழந்து தவித்த 32 நபர்கள் மீட்பு

தமிழ்நாட்டைச் சேர்ந்த இராமநாதபுரம் , திருவாரூர் , சிவகங்கை , தூத்துக்குடி , திருநெல்வேலி , திருச்சிராப்பள்ளி , தஞ்சாவூர் , கள்ளக்குறிச்சி , தென்காசி , மதுரை , கடலூர் ஆகிய 11 மாவட்டங்களை சேர்ந்த 32 நபர்கள் குவைத்து நாட்டில் சிக்கித்தவித்தவர்களை தமிழக அரசின் முயற்சியால் தமிழ்நாட்டிற்கு அழைத்து வரப்பட்டு அவர்களின் சொந்த மாவட்டங்களுக்கு அரசின் செலவில் அனுப்பி வைக்கப்பட்டனர் . மாவட்ட ஆட்சித்தலைவர் சிவராசு தகவல் தெரிவித்துள்ளார்.

குவைத்தில் கடந்த 9 மாதங்களாக வேலையிழந்து , வருமானமின்றி துன்புற்றிருந்த தமிழகத்தை சேர்ந்த 32 நபர்கள் ( இராமநாதபுரம் -8 திருவாரூர் -6 சிவகங்கை மற்றும் தூத்துக்குடி தலா 3 நபர்கள் , திருநெல்வேலி -4 நபர்கள் , திருச்சிராப்பள்ளி , தஞ்சாவூர் தலா 2 நபர்கள் , கள்ளக்குறிச்சி , தென்காசி , மதுரை , கடலூர் தலா -1 நபர்கள் ) குவைத்தில் உள்ள இந்திய தூதரகத்தின் உதவியுடனும் மத்திய / மாநில அரசுகளின் முயற்சியின் அடிப்படையிலும் நேற்று 19-11-2020 திருச்சிராப்பள்ளி விமான நிலையம் வந்தடைந்தனர் .

அரசின் வாகன அவர்களை திருச்சிராப்பள்ளி மாவட்ட வருவாய்த் துறை அலுவலர்கள் வரவேற்று அவர்களது சொந்த மாவட்டங்களுக்கு செல்வதற்காக செலவில் ஏற்பாடு செய்ததுடன் , அவர்களுக்கு உணவு மற்றும் குடிநீர் வழங்கி பாதுகாப்பாக அனுப்பி வைக்கப்பட்டனர் என்று மாவட்ட ஆட்சியர் சிவராசு தெரிவித்தார்