உதயநிதி மீது திருச்சியில் 3 காவல் நிலையங்களில் வழக்குப்பதிவு!

உதயநிதி மீது திருச்சியில் 3 காவல் நிலையங்களில் வழக்குப்பதிவு!

திமுக இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் திருச்சியில் நேற்று கட்சிக் கொடி ஏற்றுதல் & திருமண விழாக்களில் பங்கேற்றார். அவருக்கு திரளாக கட்சித் தொண்டர்கள் பல்வேறு இடங்களில் வரவேற்பளித்தனர்.

Advertisement

இந்நிலையில், 

கொரோனா ஊரடங்கு உத்தரவை மீறியது, அனுமதியின்றி கூடியது உள்ளிட்ட பிரிவுகளில் உதயநிதி ஸ்டாலின், மகேஷ் பொய்யாமொழி உள்ளிட்ட 350 பேர் மீது கோட்டை காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 

இதே பிரிவுகளில் 

மணப்பாறை புத்தாநத்தம் காவல் நிலையத்தில் உதயநிதி உள்ளிட்ட 500க்கும் மேற்பட்டோர் மீதும்

Advertisement

திருவெறும்பூரில் உதயநிதி உள்ளிட்ட 200க்கும் மேற்பட்டோர் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.