திருச்சியில் பைக்கில் வந்தவரை தாக்கி கேமரா பறிப்பு - போலீசார் விசாரணை!!

திருச்சியில் பைக்கில் வந்தவரை தாக்கி கேமரா பறிப்பு - போலீசார் விசாரணை!!

திருச்சி பைக்கில் வந்தவரை தாக்கி 4 லட்சம் மதிப்புள்ள கேமராவை பறித்து சென்றுள்ள சம்பவம் குறித்து ஏர்போர்ட் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement

திருச்சி கல்லுக்குழி பகுதியை சேர்ந்தவர் நோயல் (23). இவர் சுந்தர் நகர் பகுதியில் உள்ள ஸ்டுடியோவில் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் நேற்று ஜே.கே நகர் லூர்துசாமிபிள்ளை தெருவில் உள்ள வாடிக்கையாளருக்கு போட்டோ பிரேம் கொடுப்பதற்காக பைக்கில் சென்றுள்ளார்.

Advertisement

அப்போது ஜே.கே நகர் மெயின் ரோட்டில் சென்று கொண்டிருந்தபோது அவரை பின்தொடர்ந்து பைக்கில் வந்த 2 மர்ம நபர்கள் அவரை தலையில் தாக்கியதில் நிலை தடுமாறி கீழே விழுந்தார். பின்னர் கத்தியை காட்டி மிரட்டி கேமரா பேக்கை அங்கிருந்து பறித்துச் சென்று தலைமறைவாகினர்.

இதுகுறித்து நோயல் ஏர்போர்ட் போலீசாரிடம் புகார் அளித்தார். வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.