ஆபத்தான நிலையில் பள்ளிக்கு செல்லும் மாணவ மாணவிகள்!!

ஆபத்தான நிலையில் பள்ளிக்கு செல்லும் மாணவ மாணவிகள்!!

திருச்சி மாவட்டம் உப்பிலியபுரம் அடுத்துள்ளது ஓக்கரை கிருஷ்ணாபுரம். இப்பகுதியில் சுமார் 50 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் அனைவரும் கால்நடைகளை வைத்து விவசாயம் செய்து வருகின்றனர். இவர்கள் அத்தியாவசிய பொருள்களை வாங்குவதற்கு துறையூர் நகரப் பகுதிக்கு வர வேண்டி உள்ளது.

இந்த நிலையில் பெஞ்சால் புயலின் தாக்கத்தால் இப்பகுதியில் பெய்த கன மழையின் காரணமாக கோட்டப்பாளையம் பகுதியில் உள்ள ஜம்பேரியில் இருந்து உபரி நீர் இங்கு உள்ள ஆற்றின் வழியாக செல்கிறது. இங்கு வசிக்கும் பொதுமக்கள் ஆற்றை கடந்த நகர்புறத்திற்கு வரவேண்டிய சூழ்நிலை வாழ்ந்து வருகின்றனர்.

இங்கு உள்ள மாணவ மாணவிகள் நகரப் பகுதியான துறையூரில் உள்ள பள்ளிக்கூடங்களில் கல்வி பயின்று வருகின்றனர். மேலும் இப்பகுதியில் பத்து நாட்களுக்கு மேல் கடந்தும் மழைநீர் வடியாத காரணத்தினால் இங்கிருந்து பள்ளிக்கு செல்லும் மாணவ மாணவிகள் ஆற்றில் இறங்கி நீரில் நனைந்தபடியே மிகவும் சிரமத்தோடு துறையூர் பகுதியில் உள்ள பள்ளிக்கு செல்கின்றனர்.

மேலும் பொதுமக்கள் தங்கள் அத்தியாவசிய பொருள்களை வாங்குவதற்கும் இந்த ஓடையை கடந்து செல்கின்றன. ஆற்றை கடப்பதற்கு பாலம் அமைத்து தர பலமுறை மனு அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கை எடுக்கவில்லை என தெரிவித்தனர். மழை காலங்களில் இவர்களின் இயல்பு வாழ்க்கை முடங்கி விடுவதாகவும் தெரிவிக்கின்றனர்.

எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் போர்க்கால அடிப்படையில் பாலம் அமைத்து தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/Ge0RgD7SIGiHznfNQgIidr

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision