மருத்துவத்திற்க்கு வந்தவர் 48 மணி நேரமாக மருத்துவனையில் வாயிலில் படுத்து கிடக்கும் அவலம்
பூலோக வைகுண்டம் என்று அழைக்கப்படும் ஸ்ரீரங்கம் அரங்கநாதர் திருக்கோயிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். மிகமுக்கியமாக மார்கழி மாதத்தில் வைகுண்ட ஏகாதசி திருவிழா நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து சென்றுள்ளனர்.
கடந்த இரண்டு வருடமாக கோவிட் தொற்று காலத்தில் அதிகமானோர் ஸ்ரீரங்கத்திற்கு குறிப்பாக ஆதரவற்றவர்கள் குடும்பத்தினரால் வெறுத்து ஒதுக்கியவர்கள் ஏராளமானோர் தஞ்சம் அடையும் நிலை ஏற்பட்டுள்ளது. ஸ்ரீரங்கத்திற்கு வந்தால் உணவு கிடைக்கும் என நம்பி இங்கேய தங்கி விடுகின்றனர். ஆனார் அவர்களுக்கு அவசரகால உதவிகள் என்று மருத்துவமனைக்கு செல்லும் பொழுது அவர்களுக்கு மருத்துவ சிகிச்சைகள் மறுக்கப்படுகிறது.
தற்போது கடந்த 48 மணிநேரமாக 55 வயது மதிக்கத்தக்க ஒருவர் ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனை வாயிலில் சாலையில் குளிரிலும் ,வெயிலிலும் படுத்து கிடக்கிறார். அவர் மருத்துவ சிகிச்சைக்கு உள்ளே சென்ற பொழுது கூட யாருமில்லை, உதவியாளர் இல்லாத நிலையில் அவரை உள்ளே அனுமதிக்கவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.
தற்போது வரை அரசு மருத்துவமனை வாயிலில் அவர் படுத்துள்ளார். அருகாமையில் திருச்சி மாநகராட்சி ஸ்ரீரங்க கோட்ட அலுவலகம் உள்ளிட்ட முக்கிய அலுவலகங்கள் உள்ளது. பொது மக்கள் ஆயிரக்கணக்கானோர் இவரை கடந்து பார்த்துக்கொண்டு மட்டுமே செல்கின்றனர். யாருக்கும் மனிதாபிமானம் இல்லாத நிலையில் அவர் மருத்துவமனை வாயில் சாலையில் ஓரமாக படுத்து உள்ளார்.
இதற்கு மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது .இதைவிட ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனையில் சவக்கிடங்கில் 7 உடல்கள் மட்டுமே வைக்க முடியும். அடையாளம் தெரியாத நபர்களை அதிகமான நாட்கள் வைத்து இருப்பதால் அவசர காலங்களில் விபத்து சம்பவங்களில் உயிரிழந்தவர்களின் உடல்கள் அங்கே வைக்க முடியாத நிலையும் ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து ஆதரவற்றவர்களுக்கு உள்ளே சிகிச்சை மறுப்பது தொடர்ந்து அரங்கேறி வருவதாக பொதுமக்கள் குற்றச்சாட்டை முன்வைக்கின்றனர். மனிதாபிமான மருத்துவர்களிடம் மனிதம் குறைந்து விட்டதா என்ற கேள்வி இச்சம்பவத்தால் எழுகிறது.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....
https://chat.whatsapp.com/Eyd4BfTFH1SEyxmvvYevul
டெலிகிராம் மூலமும் அறிய...
https://t.me/trichyvisionn