மழை வருது மழை வருது குடை கொண்டு வா! மீண்டும் குற்றால சீசன்!!
இந்தாண்டு வானிலை ஆய்வு மையம் 36 சதவிகிதம் குறைந்த அளவே மழை பெய்திருப்பதாக தகவல் கூறிய நிலையில் கேரள மாநிலம் கண்ணூரில் இந்த காட்சி படமாக்கப்பட்டது. இன்று மதியம் வானில் தென்பட்ட இந்த வர்ண ஜாலத்தை 'Sun halo' என்கிறார்கள் அதாவது சூரிய ஒளிவட்டம் என்று பொருள்.
வானில் பனி படிகங்களால் தான் சூரிய ஒளிவட்டம் ஏற்படுகிறதாம். வளிமண்டலத்தில் உள்ள பனி படிகங்கள், வானில் சூரிய ஒளிவட்டத்தை உருவாக்க தேவையான ப்ரிஸம் விளைவை உருவாக்குகின்றன. இந்த பனி படிகங்களின் மேல் வெப்ப மண்டலத்தில் ஒரு சில மைல் தூரம் வரை சிரோஸ்ட்ராடஸ் மேகங்கள் உருவாகிற போது இந்த சூரிய ஒளிவட்டம் ஏற்படுகிறது என்கிறார்கள் சரி சரி கண்ணுக்கு குளிர்ச்சியாக இருக்கே எனக்கடந்து போகாதீர்கள்
ஏனெனில் இந்த ஆண்டு எல்லாமே பருவம் தப்பித்தான் நடக்கிறது இந்த வளிமண்டல வர்ண ஜாலத்தால் 'வரும் நாட்களில் மழை பெய்வதற்கான அறிகுறியாக இது பார்க்கப்படுகிறது' என்கிறார் அவ்விட தேசத்தில் இருந்து நமது நண்பர் உன்னிகிருஷ்ணன்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய.... https://chat.whatsapp.com/D0TGphikme7AsbscoQstiY
#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvisionn
https://www.threads.net/@trichy_vision