புதிதாக அழகு நிலையம் திறந்த பெண் உரிமையாளர் மற்றும் பணியாளர்களுக்கு கத்தி குத்து - திருச்சியில் பரபரப்பு!

புதிதாக அழகு நிலையம் திறந்த பெண் உரிமையாளர் மற்றும் பணியாளர்களுக்கு கத்தி குத்து - திருச்சியில் பரபரப்பு!

திருச்சி பீமநகர் நியூ ராஜா காலனியை சேர்ந்தவர் சலீமா. இவர் நேற்று தென்னூர் அரசமரத்தடி பஸ் நிறுத்தம் அருகே புதிதாக அழகு நிலையம் ஒன்றை திறந்தார். இதனையடுத்து சலீமாவின் அழகு நிலையத்திற்கு திடீரென அழகு நிலையத்திற்குள் புகுந்த ஒரு கும்பல் அங்கிருந்த சலீமா, புவனா, ரூபன், ரஞ்சித் ஆகிய 4 பேரை சரமாரியாக கத்தியால் குத்தினர். 

Advertisement

பின்னர் அந்த கும்பல் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். தகவல் அறிந்து அங்கு சென்ற தில்லை நகர் போலீசார் காயம் அடைந்தவர்களை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இதனையடுத்து 4 பேர் மீது தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் குறித்து அந்த பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்து வருகின்றனர்.

Advertisement

மேலும், புதிதாக அழகு நிலையம் தொடங்கிய சலீமா, ஏற்கனவே லட்சுமணன் என்பவருடன் அழகு நிலையம் நடத்தி வந்ததாகவும், லட்சுமணனுக்கு தெரியாமல் புதிதாக இந்த அழகு நிலையம் தொடங்கியதால் சலீமாவின் அழகு நிலையத்திற்கு ஒரு கும்பலோடு வந்த லட்சுமணன் அங்கிருந்தவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு கத்தியால் குத்தியுள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்ததுள்ளது. இதனையெடுத்து 4 பேரை கத்தியால் குத்தியவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய

https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO