திருச்சியில் புதிதாக சீரமைக்கப்பட்ட சாலை மழையால் சேதம் - மாற்றியமைக்க பகுதி மக்கள் கோரிக்கை!

திருச்சியில் புதிதாக சீரமைக்கப்பட்ட சாலை மழையால் சேதம் - மாற்றியமைக்க பகுதி மக்கள் கோரிக்கை!

திருச்சி தீரன் நகர் பகுதியில் புதிதாக அமைக்கப்பட்ட சாலை மழையால் பள்ளங்கள் விழுந்து சேதமடைந்துள்ளதால் சாலையை மீண்டும் மாற்றி அமைக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். 

Advertisement

பிரதம மந்திரியின் கிராம சாலைகள் திட்டத்தின் கீழ் மத்திய அரசாங்கத்தால் கடந்த 8 வருடங்களுக்கு முன்பாக திருச்சி தீரன் நகர் பகுதி பெரியார் சாலை தார் சாலையாங அமைக்கப்பட்டது. இந்நிலையில் தற்போது மீண்டும் அச்சாலையை புதுப்பிக்கும் பணிகள் நடைபெற்றுக் கொண்டு வருகிறது. 

அதன் ஒரு பகுதியாக அங்குள்ள சாலையை அகற்றி புதிதாக மேலே ஜல்லி மற்றும் கற்கள் போட்டு புதிய தார்சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வந்தன. இதில் முதற்கட்ட பணிகள் நடைபெற்ற நிலையில் இன்னும் தார் ஊற்றப்படாத நிலையில் திருச்சியில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருவதால் சாலையில் பல இடங்களில் பள்ளங்கள் விழுந்து காணப்பட்டுள்ளது. 

Advertisement

இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில்... "தற்போது சாலையில் தார் போடாத நிலையில் சாலையில் பல இடங்களில் பள்ளங்கள் விழுந்துள்ளது. எனவே மீண்டும் சாலையை சீரமைத்து பிறகு தார் ஊற்ற வேண்டும்.  மழைக்காலம் முடிந்த பிறகு அடுத்த கட்ட பணிகளை தொடங்கினால் நன்றாக இருக்கும்" என்று கோரிக்கை விடுக்கின்றனர்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய

https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO