நகைக்கடை ஊழியர் கொலையில் 7 பேர் கைது - கொலையாளிகளின் நாடகம் அம்பலம்

நகைக்கடை ஊழியர் கொலையில் 7 பேர் கைது -  கொலையாளிகளின் நாடகம் அம்பலம்

திருச்சி  கரூர் பைபாஸ் சாலையில் இயங்கி வரும் ப்ரணவ் ஜூவல்லரி நகை கடையின் ஊழியர் மார்ட்டின் ஜெயராஜ் , கார் ஓட்டுநர் பிரசாந்த் ஆகியோர் கடந்த 8 ம் தேதி சென்னையில்  1.5 கிலோ  தங்கத்தை கொள்முதல் செய்து காரில் எடுத்து வரும் போது உழுந்தூர்பேட்டை அருகே வந்த போது நகை கடை ஊழியர் மார்டீன் ஜெயராஜை உடன் சென்ற டிரைவர் பிரசாந்த் உள்ளிட்ட 7 பேர் கொண்ட கும்பல் கார் மற்றும் 1.500 கிலோ நகையுடன் கடத்தி கொலை செய்து உடலை மண்ணச்சநல்லூர் அருகே அழகியமணவாளம் கிராமத்தில் புதைத்து கொலையாளிகள் தப்பியோடினர்.

 நகை கடை உரிமையாளர் மதன் கொடுத்த புகாரின் பேரில் உறையூர் காவல் ஆய்வாளர் மணிராஜ் வழக்கு பதிந்து ஸ்ரீரங்கம் மாம்பழசாலை பகுதியைச் சேர்ந்த கார் ஓட்டுநர் பிரசாந்த் இவரது நண்பர் கிழகுறிச்சி கிராமத்தைச் சேர்ந்த பொன்னர் மகன் பிரசாந்த் ஆகியோரைக் கைது செய்து, அவர்களிடமிருந்த 1.300 கிலோ தங்கம் பறிமுதல் செய்தனர். 

கொலையில் பல திடுக்கிடும் தகவல்களும் கொடூர நிகழ்வுகளும் அரங்கேறியுள்ளது. நகையுடன் திருச்சி திரும்பிய மார்ட்டினை தொழுதூர் அருகே பிரசாந்துடன் 6 பேர் கொண்ட கும்பல் கொலை செய்து காரிலேயே பிரேதத்தை வைத்து மண்ணச்சநல்லூர் அருகே உள்ள அழகிய மணவாளன பகுதியில் அவரின் உடலை புதைத்துள்ளனர். அந்த இடத்தையும் போலீசார் விசாரணையில் கொலையாளிகள் காண்பித்துள்ளனர்.மேலும் அவரின் உடைகளை எரித்ததாக தகவல் கூறப்படுகிறது.நகைகளை பிரசாந்தின் காதலியிடம் கொடுத்து வைத்திருந்தும் தெரிகிறது.

கொலையாளிகள் கொலையை செய்து நகைகளை மார்ட்டின் கொள்ளை அடித்து சென்று விட்டதாக நாடகமாடி எப்போதும் போல சாதாரணமாக அடுத்தநாள் அவரவர் வீடுகளில் கொலையாளிகள் இருந்ததும் காவல்துறையின் விசாரணையில் தெரியவந்துள்ளது.

  திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய!
https://chat.whatsapp.com/Hb7keSxfvguFoCh6GAszzd