பொதுமக்களின் நலன் கருதி முன்னுதாரணமாக செயல்பட்டு வரும் திருச்சி LA சினிமாஸ்!!

பொதுமக்களின் நலன் கருதி முன்னுதாரணமாக செயல்பட்டு வரும் திருச்சி LA சினிமாஸ்!!

தமிழகத்தில் கொரோனா தொற்று கடந்த சில மாதங்களாக அதிகரித்து வருவதால் மீண்டும் தியேட்டர்களில் 50 சதவீத இருக்கைகளுக்கு மட்டுமே காட்சிகள் வெளியிடப்பட வேண்டுமென தமிழக அரசு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

இந்நிலையில் திருச்சியின் முக்கியமான ஒரு திரையரங்கமும், கல்லூரி மாணவர்களின் மனம் கவர்ந்த திரையரங்கமும், பழமையான திருச்சிக்கு பெருமை சேர்க்கும் LA மாரிஸ் திரையரங்கத்தில் அரசு வழிகாட்டுதலின்படி 50 சதவீத இருக்கைகளுடன் மட்டுமே செயல்பட்டு வருகிறது.

திரையரங்கத்திற்கு வரும் பொதுமக்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு திரையரங்கம் முழுவதும் ஒவ்வொரு காட்சிக்கும் இடையிலும் கிருமி நாசினி தெளித்து சுத்தம் செய்யப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் சானிடைசர் முகக் கவசங்கள் வழங்கி விழிப்புணர்வை ஏற்படுத்தி ஒரு முன்னுதாரண தியேட்டராக திருச்சியில் LA சினிமாஸ் விளங்கி வருகிறது என்றால் அது மிகையாகாது.

மேலும் டிக்கெட் வாங்கும் இடம் மற்றும் தின்பண்டங்கள் வாங்கும் இடங்களில் சமூக இடைவெளி கடைபிடித்து நிற்கும் வகையில் பாதனிகள் போன்ற அமைப்பை அமைத்து பொதுமக்களுக்கு பாதுகாப்பை உறுதி செய்துள்ளனர்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய

https://chat.whatsapp.com/EOjjjDwQWZa8HOTrrk6ttd