ரமலான் மாத இரவு நேர தொழுகைக்கு அனுமதி கேட்டு மனு.

ரமலான் மாத இரவு நேர தொழுகைக்கு அனுமதி கேட்டு மனு.

தமிழகத்தில் கொரோனா தொற்று 2வது அலை பரவி கொண்டிருக்கும் நிலையில், அதனை கட்டுப்படுத்துவதற்காக தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை வழிமுறைகளை  அறிவித்துள்ளது. அதில் மதம் சார்ந்த திருவிழாக்கள் நடத்துவதற்கு தடை விதித்துள்ளது. மேலும் வழிப்பாட்டு தலங்களில்  வழிபாடுகள் இரவு 8 மணி வரை மட்டுமே நடைபெற வேண்டும் என்றும், அதில்  குறிப்பிடப்பட்டுள்ளது. இந்நிலையில் ரமலான் மாதம் பள்ளிவாசலில் இரவு நேர தொழுகைக்கு அனுமதிக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு திருச்சி மாவட்டத்தில் பாப்புலர் ஃப்ரண்ட் இஸ்லாமிய அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.

இதுக்குறித்து பேசிய இவ்அமைப்பின் மாவட்ட செயலாளர் முஜிப்ரஹ்மான்... மீண்டும் கொரனா தொற்று எண்ணிக்கை அதிகரித்து வருவதை கருத்தில் கொண்டு தமிழக அரசு ஏப்ரல் 10 முதல் புதிய வழிமுறைகளை அறிவித்துள்ள நிலையில், இரவு 8 மணிக்கு மேல் பொது வழிபாடு நடத்த அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இந்த காலகட்டத்தில் இஸ்லாமியர்களின் ஐம்பெரும் கடமைகளில் ஒன்றான புனித ரமலான் மாதம் 14ஆம் துவங்க இருக்கிறது இந்த மாதத்தில் முஸ்லிம்கள் காலை முதல் மாலை வரை நோன்பு இருந்து இரவு நேரங்களில் இறைவனைத் தொழுது பிராத்தனையில் ஈடுபடுவர், இல்லாதோருக்கு உதவிடுவார். கடந்த ஆண்டு ஊரடங்கு அமலில் இருந்த காரணத்தால் இரவு நேர பிரார்த்தனைகளில் முஸ்லிம்கள் முழுமையாக ஈடுபட முடியவில்லை.

தற்போது தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில் இரவு நேர வழிபாடு தடுக்கப்பட்டிருக்கிறது இது புனித ரமலான் மாதத்தில் முஸ்லிம்களுக்கு மிகப் பெரும் இழப்பாக அமையும் தமிழக அரசு முஸ்லிம்களை இரவு நேர தொழுகைக்கு அனுமதிக்க வேண்டும் என்பதே ஒட்டுமொத்த முஸ்லிம்களின் எதிர்பார்ப்பு எனவே இதனைக் கருத்தில் கொண்டு ரமலான் மாதத்தில் பள்ளிவாசல்களில் இரவுநேர தொழுகைக்காக இரவு 11 மணிவரை அனுமதிக்க வேண்டும் என பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய

https://chat.whatsapp.com/Ge0RgD7SIGiHznfNQgIidr