முகக் கவசங்கள் அணியாமல் வந்த வாகன ஓட்டிகளுக்கு மரக்கன்றுகள் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்திய திருச்சி மாநகர காவல்துறை!!
உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு திருச்சி மாநகர காவல் துறை சார்பாக முகக் கவசங்கள் அணியாமல் வந்த வாகன ஓட்டிகளுக்கு மரக்கன்றுகள் வழங்கி விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.
Advertisement
திருச்சி மாநகர சட்டம் மற்றும் ஒழுங்கு துணை ஆணையர் பவன்குமார் ரெட்டி தலைமையில் மன்னார்புரம் பகுதியில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது முகக் கவசங்கள் அணியாமல் வந்த 50க்கும் மேற்பட்ட வாகன ஓட்டிகளுக்கு மரக்கன்றுகள் மற்றும் முகக் கவசங்கள் வழங்கியும், மரம் வளர்ப்பதின் முக்கியத்துவத்தையும் எடுத்துக்கூறி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
பொதுமக்களும் தாங்களாகவே முன் வந்து மரக்கன்றுகளையும் வாங்கி சென்றனர். மேலும் பொதுமக்கள் முடிந்த வரை வெளியே வருவதை தவிர்க்க வேண்டும் என்றும் ஆண்டுக்கு ஒரு மரக்கன்று நட்டு சுற்றுச்சூழலை பாதுகாக்க வேண்டும் எனவும் திருச்சி மாநகர ஆணையர் கேட்டுக்கொண்டுள்ளார்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய
https://chat.whatsapp.com/Cmwvowix0UuFpUMHHUljve