திருச்சி ஸ்ரீ குளுந்தாளம்மன் கோவில் குடமுழுக்கு விழா

திருச்சி ஸ்ரீ குளுந்தாளம்மன் கோவில் குடமுழுக்கு விழா

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே நகர் கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ குளுந்தாளம்மன் மற்றும் பரிவார தெய்வங்களான ஸ்ரீ வெள்ளந்தாங்கி அம்மன், ஸ்ரீ பின்னமரத்தான், ஸ்ரீ மதுரை வீரன், ஸ்ரீ அய்யனார், ஸ்ரீ சாவடி பிள்ளையார் கோவில் புதுப்பிக்கப்பட்டு மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது.

இந்த கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு செப்டம்பர் 1 ம் தேதி பக்தர்கள் காவிரியில் இருந்து தீர்த்த குடம் எடுத்து வந்து வழிபட்டனர். பின்னர் ஸ்ரீ விக்னேஸ்வர பூஜை, புண்யாகவாசனம், தனபூஜை, வாஸ்து சாந்தி மற்றும் தீபாராதனை நடைபெற்றது.

செப்டம்பர் 2 ம் தேதி விசேஷ சாந்தி, விநாயகர் பூஜை, கன்னிகா பூஜை, அஸ்வ பூஜை, மூல பூஜை மற்றும் 2-ம் கால யாகசாலை பூஜைகள் ஹோமங்கள் நடைபெற்றன. விழாவில் முக்கிய நிகழ்வான கும்பாபிஷேக விழாவில் 4-ம் காலை யாக பூஜையும், கடம் புறப்பாடு நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து ஸ்ரீ குளுந்தாம்மன் கோயில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து வெள்ளந்தாங்கி அம்மன், மதுரை வீரன் மூலவர் கும்பாபிஷேகம் ஆசியவையும் விமரிசையாக நடைபெற்றது.

இவ்விழாவில் பரம்பரை அறங்காவலர் வசந்தா பாபு, முத்தையா, கிராம முக்கியஸ்தர்கள், நகர் , மாந்துரை, நெருங்சலக்குடி, ஆங்கரை, திருமங்கலம், பெருங்காலூர், உள்ளிட்ட கிராமங்களிலிருந்து திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய.... https://chat.whatsapp.com/D0TGphikme7AsbscoQstiY

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvisionn

https://www.threads.net/@trichy_vision