ஈரோடு - திருச்சி ரெயில் பகுதி நிறுத்தம்

Sep 4, 2023 - 14:32
Sep 4, 2023 - 14:38
 2062
ஈரோடு - திருச்சி ரெயில் பகுதி நிறுத்தம்

ஈரோட்டில் இருந்து காலை 8:10 மணிக்கு புறப்படும் ஈரோடு - திருச்சி முன்பதிவில்லா சிறப்பு எக்ஸ்பிரஸ் (வண்டி எண் : 06810) ரெயில் நாளை (05.09.2023) (செவ்வாய்க்கிழமை) மற்றும் (12.09.2023) (19.09.2023), (26.09.2023)-ந் தேதிகளில் கோட்டை ரெயில் நிலையம் - ஜங்ஷன் இடையே பகுதியாக நிறுத்தப்படுகிறது. 

இதே போல் காரைக்குடியில் இருந்து காலை 9:40 மணிக்கு புறப்படும் காரைக்குடி - திருச்சி முன்பதிவில்லா சிறப்பு எக்ஸ்பிரஸ் (வண்டி எண் : 06888) ரெயில் நாளை (05.09.2023) (12.09.2023), (19.09.2023), (26.09.2023) ஆகிய நாட்களில் குமாரமங்கலம் - திருச்சி ஜங்ஷன் இடையே பகுதியாக நிறுத்தப்படுகிறது.

இந்த தகவல் ரெயில்வே நிர்வாகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய.... https://chat.whatsapp.com/D0TGphikme7AsbscoQstiY

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvisionn

https://www.threads.net/@trichy_vision