திருச்சியில் வெண்டைக்காயை சாலையில் வீசி விவசாயிகள் போராட்டம்- பரபரப்பு

திருச்சியில் வெண்டைக்காயை சாலையில் வீசி விவசாயிகள் போராட்டம்- பரபரப்பு

 திருச்சி அண்ணாசிலை அருகே தொடர் காத்திருப்பு போராட்டம் இன்று 39வது நாளாக இன்று தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு அவர்களின் தலைமையில் நடைபெற்று வருகிறது இந்நிலையில்

 திருச்சி அண்ணாசிலையில் வெண்டைக்காய் மாலை அணிவித்து வெண்டைக்காய்க்கு உரிய விலை வழங்கு வழக்கு எங்களை காப்பத்து.. காப்பத்து... என்று 500 கிலோக்கு மேல் உள்ள வெண்டைக்காய்யை வீசும் போராட்டம் நடத்தினர்.முன்னதாக பொதுமக்களுக்கு வெண்டக்காய் கொடுக்க திட்டமிட்ட போது தள்ளுமுள்ளாக மாறியது.

வெண்டைக்காய் விலை கடும் வீழ்ச்சியை சந்தித்துள்ளது. குறிப்பாக ஒரு கிலோ வெண்டைக்காய் ஒரு ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுவதால் விவசாயிகள் பாதிப்பை சந்தித்துள்ளனர்.

ஒரு கட்டத்தில் வெண்டைக்காயை சாலையில் கொட்டி விவசாயிகள் சாலையில் படுத்து கொண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.இதனால் காவல்துறையினருக்கும் விவசாயிகளுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. வெண்டைக்காய்களை சாலையில் கொட்டி விவசாயிகள் போராட்டம் நடத்தியதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.பாதுகாப்பு காரணங்களுக்காக காவல்துறையினர் அதிகளவில் குவிக்கப்பட்ட னர்.

 

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய.... https://chat.whatsapp.com/GgA8w690Wqd7IwIEsO6ZZ5

டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvisionn

https://www.threads.net/@trichy_vision