தினமலர் நாளிதழை தீயிட்டு எரித்து திமுக தகவல் தொழில்நுட்ப அணியினர் போராட்டம்
தமிழ்நாடு அரசு, அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் பயன்பெறும் வகையில் காலை உணவு திட்டத்தை அறிமுகப்படுத்தி ஏழை, எளிய மாணவர்களுக்கு காலை உணவை வழங்கி வருகிறது. இதில் தமிழக முழுவதும் பல்லாயிரக்கணக்கான ஏழை மாணவர்கள் காலையில் வீடுகளில் சமைக்க முடியாத நிலையில் பள்ளிக்குச் சென்று உணவு அருந்தி வருகிறார்கள்.
இந்தத் திட்டத்தை அனைத்து தரப்பு மக்களும் வரவேற்று தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்து வருகிறார்கள். இந்த நிலையில் தினமலர் நாளிதழ் தமிழக அரசின் காலை உணவு திட்டத்தை கொச்சைப்படுத்தும் விதமாகவும் காலை உணவு திட்டத்தால் பள்ளி கக்கூஸ் நிரம்பி வழிகிறது என செய்தி வெளியிட்டுள்ளது. இது ஏழை மாணவர்கள் மத்தியில் பெரும் மனவேதனையை ஏற்படுத்தியுள்ளது.
இதனை தொடர்ந்து இந்த தினமலர் நாளிதழை கண்டித்து திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே பெரியார் சிலை முன்பு திமுக தகவல் தொழில்நுட்ப அணி மாநில துணை செயலாளர் கேசவன் தலைமையில் ஏ.கே.அருண், முத்தமிழ் கருணாநிதி, டிஜிட்டல் ரமேஷ் முன்னிலையில் திருச்சி மண்டலத்துக்குட்பட்ட கரூர், பெரம்பலூர், அரியலூர், புதுக்கோட்டை, கன்னியாகுமரி சேர்ந்து நிர்வாகிகள் 50க்கும் மேற்பட்டோர் மற்றும் மாவட்ட துனை ஒருங்கிணைப்பாளர் லட்சுமணன், ஜெயசெலின், தபசீர் மற்றும் தொகுதி ஒருங்கிணைப்பாளர் கோவிந்தசாமி மற்றும் நிர்வாகிகள் தினமலர் நாளிதழை எரித்து போராட்டத்தில் ஈடுபட்டு கண்டன கோஷங்களை எழுப்பினார்கள்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய.... https://chat.whatsapp.com/D0TGphikme7AsbscoQstiY
#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvisionn
https://www.threads.net/@trichy_vision