திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் வைகுண்ட ஏகாதசி பகல்பத்து உற்சவம் - பக்தர்களின்றி துவங்கியது!!

திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில்  வைகுண்ட ஏகாதசி பகல்பத்து உற்சவம் - பக்தர்களின்றி துவங்கியது!!

108 வைணத்திருத்தலங்களில் முதன்மையானதும் பூலோக வைகுண்டம் என்றழைக்கப்படும் ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோயிலில் வைகுண்ட ஏகாதசி திருவிழா 15.12.2020 இன்று தொடங்கியது.பகல்பத்து ராப்பத்து என 20 நாட்கள் இப்பெருவிழா நடைபெறும்.முக்கிய திருவிழாவான இராப்பத்து உற்சவம் வருகிற (25.12.2020) அதிகாலை 5.00 மணிக்கு பரமபதவாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெறும்.அதிகாலை 3.45 மணிக்கு ரத்ன அங்கி சேவையுடன் கிளிமாலை அணிந்து நம்பெருமாள் மூலஸ்தானத்திலிருந்து புறப்பட்டு அதிகாலை 4.45 மணிக்கு பரமபதவாசல் திறக்கப்படும்.

Advertisement

ஜனவரி (04.01.2021)வைகுண்ட ஏகாதசி திருவிழா நிறைவு பெறுகிறது.

 கொரோனா காரணமாக

24.12.2020 ஆம் தேதி மாலை 6 மணியிலிருந்து மறுநாள் (25.12.2020) சொர்க்கவாசல் அன்று காலை 8 மணி வரை பக்தர்களுக்குஅனுமதி கிடையாது.

எந்தவித சிறப்பு அனுமதி அட்டைகளும் வழங்கப்படாது .20 நாட்கள் திருவிழாவில் பக்தர்கள் காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை ஒரு மணி நேரத்திற்கு 600 பேர் வீதம் மட்டுமே அனுமதிக்குப்படுவார்கள்.

சொர்க்கவாசல் அன்று மட்டும் ஆன்லைனில் பதிவு செய்த பக்தர்களுக்கு மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள்.

மற்ற உற்சவ நாட்களில் ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்பவர்களுக்கு அனுமதி வழங்ப்படும் மற்றும் கோவிலில் டோக்கன் வழங்கப்பட்டு டோக்கன் உள்ள பக்தர்களுக்கும் அனுமதிக்கப்படுவார்கள். 20 நாட்களில் உபயதாரர்கள் கூட சிறப்பு அனுமதி கிடையாது .

Advertisement

வைகுண்ட ஏகாதசி திருவிழாவிற்காக 450 காவல் துறையினர் சுழற்சி முறையிலும் சொர்க்கவாசல் திறப்பு அன்று 

 1200 காவல்துறையினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள்.

சொர்க்கவாசல் திறப்பை காண முக்கிய பிரமுகர்கள் உட்பட யாருக்கும் அனுமதி இல்லை.

பொதுமக்கள் காவல் துறைக்கும் கோவில் நிர்வாகத்திற்கும் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என காவல் துறை ஆணையர் லோகநாதன் ஸ்ரீரங்கம் கோவில் இணை ஆணையர் ஜெயராமன் கேட்டு கொண்டுள்ளனர்.