திருச்சி மாவட்ட மைய நூலகத்தில் கோடைகால சிறப்பு பயிற்சி
திருச்சி, மாவட்ட மைய நூலகம் மற்றும் வாசகர் வட்டம் இணைந்து, மாணவர்களுக்கு "நூலக கோடை கால சிறப்பு பயிற்சிகள்" நடத்தி வரு கின்றனர்.
இச்சிறப்பு பயிற்சிகள் வரும் 31ம் தேதி வரை நடைபெற உள்ளது. விடுமுறை நாட்களை பயனுள்ளதாக கழிக்கும் வகையில் சதுரங்கப் பயிற்சி, கதை சொல்லி நிகழ்ச்சி, ஓவியப் பயிற்சி, அறிவியல் குறித்த செய்திகள், பொது அறிவு வினாடி வினா, ஆங்கில கையெழுத்து, தேவையற்ற பொருட்களை பயன்ப டுத்தி கலை பொருட்கள் தயாரிப்பது, போன்ற பல பயனுள்ள சிறப்பு பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகிறது.
அதன்படி நேற்று சிஸ் டெக் ஹார்டுவேர் மற்றும் நெட்வொர்க் அகாடமி வழங்கிய ரோபோட்டிக்ஸ் குறித்த சிறப்பு பயிற்சிகள் நடந்தது. இதில் அந்த அகாடமியின் ஊழியர்மணிகன்டன் கலந்து கொண்டு, ரோபோடிக்ஸ் குறித்த தகவல்களை செயல்முறை விளக்கத்து டன் விளக்கி பேசினார்.
இதில் ஏராளமான மாணவர்கள், மாவட்ட நுாலக அலுவலர் சிவ குமார், நுாலகர் தனலட் சுமி, வாசகர் வட்டத்தலை வர் கோவிந்தசாமி உள் ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இன்று மற்றும் நாளை ஓரிகாமிப் பயிற்சி மற்றும் வரும் நாட்களில் யோகா மற்றும் நினை வாற்றல் பயிற்சி, நீங்களும் பேச்சாளராகலாம், பாரம்பரிய விளையாட்டுகள், குழந்தைகளுக்கான உணவுமுறைகள், நாட்டுப் புறக் கலைகள் ஆகிய பயிற்கிகள் மாணவர் களுக்கு அளிக்கப்பட உள்ளது.