குடிபோதை மறுவாழ்வு மையத்தில் இறந்த இளைஞர்-விசாரணை நடத்தக் கோரி பொதுமக்கள் சாலை மறியல்

திருச்சி மாவட்டம், லால்குடி அருகே குடிபோதை மறுவாழ்வு மையத்தில் இறந்த இளைஞரின் மரணத்திற்கு உரிய விசாரணை நடத்தி போலீசார் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்திருச்சி மாவட்டம், லால்குடி அருகே உள்ள அகிலாண்டபுரம் பகுதியை சேர்ந்தவர் பனடியான் மகன் அன்பரசு (28) என்கிற அரவிந்த்.
இவர் கடந்த 13ம் தேதி சிறுகனூர் அருகே உள்ள ஆயக்குடியில் உள்ள குடிபோதை மறுவாழ்வு மையத்தில் சந்தேகத்திற்குரிய வகையில் தூக்கில் பிணமாக மீட்கப்பட்டார்.இந்த சம்பவத்தை சிறுகனூர் போலீசார் சந்தேக மரண வழக்காக வழக்குப் பதிவு செய்து இறப்பு குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் இளைஞரின் இறப்பு குறித்து போலீசார் முழு வீச்சில் விசாரணை செய்யாமல் போலீசார் மெத்தனம் காட்டி வருவதாக கூறி கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.நம்பர் ஒன் டோல்கேட் - லால்குடி சாலையில் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்ற இந்த சாலை மறியலால் வாகனங்கள் அணிவகுத்து நீண்ட வரிசையில் நின்று கடுமையாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர்.அப்போது இறந்துபோன அரவிந்தின் பிரேத பரிசோதனை அறிக்கையில் அவர் கொலை செய்யப்பட்டார்
என தெரியவரும் நிலையில் உடனடியாக குற்றாவாளிகளை கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் உறுதியளித்ததை தொடர்ந்து மறியலில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.இதனைத்தொடர்ந்து போலீசார் போக்குவரத்தை சீர் செய்து வாகனங்களை அனுப்பி வைத்தனர்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய....
https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision