தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை கடத்தியவர்கள் விற்றவர்கள் கைது

திருச்சி மத்திய மண்டல காவல்துறை தலைவர் திரு கா.ஜோசி நிர்மல் குமார் அவர்களின் உத்தரவுப்படி தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனை மற்றும் கடத்தல் ஆகியவற்றினை கட்டுப்படுத்த எடுக்கப்பட்ட நடவடிக்கையில்
நேற்று 20/5/2025 அன்று மத்திய மண்டலத்தில் உள்ள புதுக்கோட்டை கரூர் தஞ்சாவூர் மற்றும் நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களில் வாகன சோதனையின் போது சில்லறை விற்பனைக்காக மொத்தமாக கொண்டுவரப்பட்ட 1147.831 கிலோ குட்கா மற்றும் புகையிலை பொருட்கள் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட மூன்று நான்கு சக்கர வாகனங்களும் ஒரு இருசக்கர வாகனமும் கைப்பற்றப்பட்டு
ஒன்பது குற்றவாளிகள் மீது நான்கு வழக்குகள் பதிவு செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டுள்ளனர். புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட ஆளவயலில் சுமார் 256.81 கிலோ குட்கா பொருட்களும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட
வாகனமும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது பழனிசாமி மற்றும் மணிகண்டன் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர், கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட ஆண்டிக்கோட்டையில் சுமார் 319.71கிலோ குட்கா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது வீரேந்திர சிங் மற்றும் ஆனந்தகுமார் என்ற இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர் தஞ்சாவூர் மாவட்டத்தில் சுமார் 161.24 கிலோ குட்கா மற்றும் புகையிலை பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளது அங்கு சரவணன் பிரகாஷ் குஷால் ஆகிய மூவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நாகப்பட்டினம் மாவட்டம் கரியாம்பட்டி காவல் நிலைய சரகத்திற்கு உட்பட்ட இடத்தில் 410 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது சிவக்குமார் மற்றும் பிரவீன் குமார் ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர் இதுபோன்ற தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலை
பொருட்கள் விற்பனை கடத்தல் போன்ற குற்ற செயல்கள் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று திருச்சி மத்திய மண்டல காவல்துறை தலைவர் அவர்கள் எச்சரித்து உள்ளார்
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision