திருச்சியில் போலி மதுபாட்டில்கள் பறிமுதல்
திருச்சி,பழைய பால் பண்ணை அருகே செயல்படும் மனமகிழ் மன்றத்தில் போலி பாண்டிச்சேரி மதுபானங்கள் விற்கப்படுவதாக மத்திய கலால் பிரிவு அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதன் அடிப்படையில் மத்திய கலால் பிரிவு அதிகாரிகள் அந்த பாரில் திடீர் சோதனை மேற்கொண்டனர் அதில் 156 full பாட்டில்கள் மற்றும் குவாட்டர் பாட்டில் என லட்சக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள போலி பாண்டிச்சேரி மதுபானங்கள் இருப்பது கண்டறியப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது.
இது தொடர்பாக சிலம்பு ,பிரகாஷ் ,சிவா ஆகிய மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும் போலி ஸ்டிக்கர்களும் பறிமுதல் செய்யப்பட்டது.
போலி மதுபாட்டுகள் அனைத்தும் பிரபல மது ஆலை தொழிற்சாலைகளில் விலை உயர்ந்த மது வகைகளின் பெயரில் போலியாக தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டதாக போலீசார் தெரிவிக்கி ன்றனர்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...
https://chat.whatsapp.com/I1qYhcBomJGKR4Fi6km3h0
#டெலிகிராம் மூலமும் அறிய....
https://www.threads.net/@trichy_vision