வடகிழக்கு பருவமழை - பாதிக்கப்படக்கூடிய 54 இடங்கள் கண்டறியப்பட்டுள்ளது - மாவட்ட ஆட்சியர் பேட்டி
வட கிழக்கு பருவ மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து திருச்சி மாவட்ட கண்காணிப்பு அலுவலர் விஷ்ணு மற்றும் திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் ஆகியோர் திருச்சி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் ஆய்வு செய்தனர். திருச்சி முக்கொம்பு மேலணையில் முன்னேற்பாடு பணிகள் தொடர்பாக கள ஆய்வு மேற்கொண்ட பின் திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
அதில், வடகிழக்கு பருவமழை துவங்கியுள்ள நிலையில் அதனை எதிர்கொள்ளும் வகையில் மாவட்ட நிர்வாகம் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மழையை எதிர்கொள்ள மாவட்ட நிர்வாகம் தயார் நிலையில் உள்ளது. காவேரியில் 11,500 கன அடி நீர் மட்டுமே செல்வதால் வெள்ளம் ஏற்பட தற்போது வாய்ப்பில்லை.
பாதிக்கப்படக்கூடிய இடங்களாக 54 இடங்கள் கண்டறியப்பட்டுள்ளது அந்தப் பகுதிகளில் மழையால் எந்த பாதிப்பும் ஏற்படாத வகையில் உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மாவட்டத்தில் வெள்ள தடுப்பு நடவடிக்கைகளுக்காக 1 லட்சம் காலி பைகள் மணல் மூட்டை நிரப்புவதற்கு தயாராக உள்ளது, 28 ஆயிரம் மணல் மூட்டைகள் மணல் நிரப்பப்பட்டு தயாராக உள்ளன. தேவை இல்லாமல் ஆறுகளில் இறங்கி பாதுகாப்பு இல்லாமல் குளிப்பதை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும்.
விவசாயி நிலங்களில் பாதிப்பு இருந்தால், எவ்வளவு பாதிப்பு என்பதை கணக்கிட்டு, அவர்களுக்கு நிவாரணம் கொடுப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்படும். திருச்சி மாவட்ட கட்டுப்பாட்டு அறைக்கு மழை தொடர்பாக இதுவரை 36 புகார்கள் வந்துள்ளன குறிப்பாக மழை நீர் தேங்குவது உள்ளிட்டு புகார்கள் வந்துள்ளன அந்த புகார்கள் அனைத்திற்கும் உரிய தீர்ப்பு காணப்பட்டுள்ளது தேங்கிய மழைநீர் அப்புறப்படுத்தப்பட்டுள்ளன.
திருச்சி மாவட்டத்தில் உள்ள 178 ஏரி குளங்களில், 16 ஏரிகள் 70% நிரம்பியுள்ளது 28 ஏரிகள் 50 சதவீதம் நிரம்பியுள்ளது. 49 ஏரிகள் 25 சதவீதம் நிரம்பி உள்ளது. 25 சதவீதத்திற்கு குறைவாக 39 குளங்கள் உள்ளது. மழை தொடர்பாக எந்தவித வதந்திகளையும் பரப்ப கூடாது. வெள்ளம் அச்சம் தொடர்பாக கிராம மக்கள் யாரும் கால்வாய்கள் உடைப்பது உள்ளிட்ட செயல்களில் ஈடுபட வேண்டாம். எதுவாக இருந்தாலும் மாவட்ட நிர்வாகத்திற்கு தகவல் தெரிவித்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
திருச்சி மாவட்டத்தில் அனைத்து வித உபகரணங்களும் தயார் நிலையில் உள்ளன இது தவிர பயிற்சி பெற்ற 4900 தன்னார்வலர்கள் முன் களப்பணியாளர்களாக உள்ளனர் அவர்கள் மலை தொடர்பாக பாதிப்பு ஏற்பட்டால் உடனடியாக களத்திற்கு சென்று அந்த பாதிப்பு குறித்து மாவட்ட நிர்வாகத்திற்கு தகவல் தெரிவிப்பார்கள்.
திருச்சி விமான நிலையத்திலிருந்து சென்ற ஏர் இந்தியா விமானம் கோளாறு ஏற்பட்டது குறித்து, பொறியியல் கோளாறு என தெரிவித்துள்ளனர். இதுகுறித்து விரிவான அறிக்கை இன்னும் வரவில்லை என தெரிவித்தார்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/LYWjbKaEy206I5aquHTp81
#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision