3 ஆயிரம் கையெழுத்துக்களை பிரதமர் மோடிக்கு அனுப்பும் குளித்தலை மக்கள்

 3 ஆயிரம் கையெழுத்துக்களை பிரதமர் மோடிக்கு அனுப்பும் குளித்தலை மக்கள்

காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்ட கர்நாடக அரசு தொடர்ந்து தீவிரம் காட்டி வருகிறது. இதற்கு கர்நாடக அரசை கண்டித்தும் அணைக்கட்டு எந்த விதமான அனுமதி வழங்கக் கூடாது என்று வலியுறுத்தி மாபெரும் கையெழுத்து இயக்க நிகழ்ச்சி குளித்தலை காவிரி பாசன விவசாயிகள், சமூக ஆர்வலர்கள், பொதுநல அமைப்புகள் சார்பாக குளித்தலை பேருந்து நிலையத்தில் கையெழுத்து பெறும் நிகழ்ச்சி நடைபெற்றது.

கர்நாடக அரசிற்கு எதிர்ப்பை பதிவு செய்யும் வகையிலும், தமிழக காவேரி பாசன விவசாயிகளுக்கு ஆதரவாகவும் மாபெரும் கையெழுத்து நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் குளித்தலை பகுதியில் ஏராளமான விவசாயிகளும், பொதுமக்களும் அனைத்துக் கட்சியினரும் பொதுநல அமைப்புகளும், பள்ளி மாணவர்களும் கல்லூரி மாணவர்களும், மாணவிகளும் ஆர்வத்துடன் கையெழுத்திட்டு சென்றனர்.

மேலும் கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக
குளித்தலை பகுதியில் உள்ள விவசாயிகள், மக்கள் பிரதிநிதிகள், பொதுமக்கள், பொதுநல அமைப்புகள்,
அரசியல் கட்சியினர், இளைஞர்கள், கல்லூரி பள்ளி மாணவ மாணவிகள், நற்பணி இயக்கங்கள், வணிகர்கள்,
ஓட்டுனர் சங்கங்கள் அனைத்துத் தரப்பினரையும் நேரில் சந்தித்து குளித்தலை பகுதி சமூக ஆர்வலர்கள் சார்பாக சுமார் மூவாயிரத்துக்கும் மேற்பட்ட கையெழுத்துகள் பெறப்பட்டு உள்ளது.

இந்த கையெழுத்துக்களையும், அணைக்கட்ட எந்த விதமான அனுமதி வழங்க வேண்டாம் என்ற கோரிக்கை மனுவுடன் பாரத பிரதமர் நரேந்திர மோடிக்கு வருகின்ற 08.09.2021 அன்று காலை குளித்தலை தலைமை தபால் நிலையம் மூலமாக அனுப்ப உள்ளனர். இந்த நிகழ்வினை சமூக ஆர்வலர்கள் முருகானந்தம், குளித்தலை சுந்தர் மற்றும் மது ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....
https://chat.whatsapp.com/E0iFlLqoEm278rd7rwHdlh

டெலிகிராம் மூலமும் அறிய....
https://t.me/trichyvisionn