மக்கள் சக்தி இயக்கம் சார்பில் இளைஞர்கள் மூலம் "விதைகளை விதைப்போம்

மக்கள் சக்தி இயக்கம் சார்பில் இளைஞர்கள் மூலம் "விதைகளை விதைப்போம்

நம் வீட்டு பிள்ளைகள் பிறந்த நாள், திருமண விழாக்கள் போன்றவற்றில் மர விதைகளை கொடுத்து அவற்றை அவரவர் வீட்டை சுற்றியுள்ள நிலங்களில் நடவு செய்தால் நாளைய சமுதாயத்திற்கான நன்மை கொண்ட பூமியையும், சுத்தமான காற்றையும், காசு இல்லா நல்ல குடிநீரையும் பெற முடியும். இந்த மர விதைகளை மழைக் காலத்துக்கு முன்பாக தரிசு நிலங்களிலும், காடுகளிலும் விதைத்து விட வேண்டும். மழை பொழியும் போது இவை உயிர் பெற்றுக் கொள்ளும். காக்கை கூட தனக்கு உணவளித்த மரத்திற்கு நன்றிக் கடனாக விதைகளை நிலத்தில் எச்சமாக விதைத்துச் செல்கிறது.

மரங்களின் விதைகளை பரப்புகின்ற அற்புதச் செயல். ஆம்! தனக்கு உணவையும் உறைவிடத்தையும் தரும் மரங்களுக்கு நன்றி செலுத்தும் வகையில் அவை தன் எச்சம் மூலம் விதைகளை ஆங்காங்கே இட்டுச் செல்கின்றன. நாவல், சீத்தா, இலுப்பை, கொடுக்காய் புளி, கொய்யா, சப்போட்டா போன்ற மரங்களிலிருந்து பழங்களைத் திண்ணும் பறவைகள் அதன் விதைகளை தான் செல்லும் இடங்களில் இடுகின்றன. வேப்பம் பழங்களை விரும்பி உண்ணும் காக்கைகள் மரம்நடும் தன்னார்வத் தொண்டர்களாகவே மாறிவிடுகின்றன. பறவைகளுக்குப் பிடித்த பழங்களான அரசு, ஆலம், அத்தி போன்றவற்றின் விதைகள் வெகுவாக பறவைகளால் பரப்பப்படுகின்றன.

பறவை இனம் விதைகளை ஆங்காங்கே பரப்பினாலும், அவற்றில் வளர்ந்து மரங்களாகும் விதைகள் சொற்பமே! சரியான சூழ்நிலையும் நீர் வசதியும் கிடைக்கும் விதைகள் மட்டுமே பல்வேறு பருவநிலைகளைத் தாக்குப்பிடித்து மரங்களாகின்றன. நாம் செய்ய வேண்டியது என்னவென்றால், துவங்கவுள்ள கோடை காலத்தில், தாகத்தில் தவிக்கும் பறவைகளுக்கு நமது சுற்றுப்புற இடங்களில் தண்ணீர் வைப்பதுதான். இப்படி வைப்பதால் பறவைகள் தாகத்தை தீர்த்த மகிழ்ச்சி ஒருபுறம் கிடைத்தாலும், பறவைகள் அங்கு விட்டுச் செல்லும் விதைகள் நம் நிலங்களில் மரங்களாகும்

வீட்டின் மாடியில் பறவைகளுக்கான உணவும், நீரை வைக்கும் போது அந்த இடத்தை நன்கு பக்குவப்படுத்தி வைத்தோமானால், அங்கு விழும் விதைகள் நன்கு வளர வாய்ப்புள்ளது. வீட்டு மாடிகளில் காக்கை, மற்ற பறவைகள் மூலம் விழுந்து விதைகளை சேகரித்த
விதைகளைச்  இளைஞர்கள் மூலம் பொன்மலை மைதானம் , பொது இடங்களில், சாலை ஒரங்களில் விதைக்கப்பட்டது. இந்த நிகழ்வு மக்கள் சக்தி இயக்க மாநில ஆலோசகர் கே.சி. நீலமேகம், இளைஞர் அணி ஈஸ்வரன், சாகனா ஸ்ரீ, சீனிவாசன், ரஞ்சித், வெங்கடேஷ், மற்றும் பலர் கலந்துக் கொண்டு விதைகளை விதைத்தார்கள்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....
https://chat.whatsapp.com/E0iFlLqoEm278rd7rwHdlh

டெலிகிராம் மூலமும் அறிய....
https://t.me/trichyvisionn